SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு 108 கலசாபிஷேகம்

2017-09-13@ 12:14:35

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு 108 சத கலசாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நவக்கிரகங்களில் ஸ்ரீகுரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு நேற்று பிரவேசித்தார். இதையொட்டி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்திர 108 சத கலசாபிஷேகம் நடந்தது. முன்னதாக தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே வேத பண்டிதர்களால் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் யாகம் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், தேன், பச்சை கற்பூரம், விபூதி, சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், தட்சிணாமூர்த்தி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை, நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், கோயில் அறங்காவலர் குழு தலைவர் குருவய்யா நாயுடு, நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா மற்றும் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்