SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மனாக வழிபட 7 சிறுமிகள் தேர்வு : மேலூர் அருகே வினோத திருவிழா துவக்கம்

2017-09-13@ 12:14:05

மேலூர்: ஏழு சிறுமிகளை அம்மனாக தேர்வு செய்து வழிபடும் விழா மேலூர் அருகே விமரிசையாக நேற்று துவங்கியது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது வெள்ளலூரில், ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் விசேஷமாக கொண்டாடப்படும். நேற்றுகாலை கோயில் முன்பு அனைத்து கிராம மக்களும் திரண்டனர். விழாவை முன்னிட்டு, 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலக்காரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில் அம்மனாக வழிபடக்கூடிய 7 சிறுமிகள், கோயில் பூசாரியால் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்வுக்காக 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோருடன் கொட்டும் மழையில் அதிகாலை முதலே காத்திருந்தனர்.

அம்மனின் குழந்தைகளாக தேர்வு பெற்ற இந்த 7 சிறுமிகளும், 15 நாட்களுக்கும் இரவில் கோயிலில் தங்கி இருப்பார்கள். இவர்கள் சுற்றுப்பகுதியை சேர்ந்த 60 கிராம மக்களையும் பகலில் சந்தித்து ஆசிர்வாதம் வழங்குவார்கள். அதனை தொடர்ந்து 15வது நாளில் பெண்கள் மதுக்கலயம் மற்றும் சிலைகளை சுமந்து கொண்டும், ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றியபடியும் 7 கிமீ தூரம் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நடைபெறும் இந்த 15 நாட்களும் இப்பகுதியில் உள்ள 60 கிராம மக்களும் கடும் விரதம் இருப்பார்கள். இந்த 15 நாட்களும் மாமிசம் உண்பது, தாளித்த உணவை உண்பது கிடையாது. மேலும் பச்சை மரங்களை வெட்டுதல், பூமியை தோண்டுதல், கட்டடம் கட்டுதல் போன்ற பணிகளும் இந்த விரத நாட்களில் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்