SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண்திறப்பு

2017-09-13@ 12:13:03

தர்மபுரி: தர்மபுரி அருகே சோகத்தூர் பெரியாண்டிச்சி அம்மனுக்கு நேற்று கண் திறப்பு மற்றும் முப்பூசை பெருவிழா நடந்தது. தர்மபுரி அருகே சோகத்தூர் மேட்டுதெரு பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண்திறப்பு மற்றும் முப்பூசை பெருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றுதல் மற்றும் கங்கணம் கட்டுதலுடன் தொடங்கியது. 11ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சக்தி அழைப்பும், அதை தொடர்ந்து  பூங்கரகம், கெங்க பூஜை, சீலகாரியம்மன் அழைத்தல், வாண வேடிக்கை ஆகியன நடந்தது.

நேற்று காலை பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண்திறப்பு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். இதை தொடர்ந்து முப்பூஜை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்