SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12 நாட்களும் வழங்கப்படும் தானங்கள்

2017-09-12@ 12:54:15

மகாபுஷ்கர திருவிழா நடைபெறும் 12நாட்களும் தானம் வழங்கினால் பலநூறு மடங்கு பெருகும் என்பது ஐதீகம் என்பதால் காவிரி துலாக்கட்டத்தில் பக்தர்களுக்கு   தானங்கள் வழங்குவதற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நாள் தேவதை மித்ரன், தானங்கள் தங்கம், வெள்ளி, தானியங்கள், பூமி.  இரண்டாம்நாள் தேவதை அர்யமா தானங்கள் வஸ்த்ரம், உப்பு, மாடு, ரத்னம்.  3ம்நாள் தேவதைத்வஷ்டா தானங்கள் வெல்லம், கறிகாய்கள், குதிரை, பழங்கள், வண்டி.  4ம் நாள் தேவதை சூர்யன், தானங்கள் நெய், எண்ணெய், தேன், பால். 5ம் நாள் தேவதை விவஸ்வாள், தானங்கள் ததன்யவண்டி, எருமை, காளை.  6ம் நாள் தேவதை அருண, தானங்கள் மருந்து, கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், வாசனை திரவியங்கள்.

7ம்நாள் தேவதை பகவான், தானங்கள் வீடு, மனை, ஆந்தோலிகா, நாற்காலி, கிழங்கு, இஞ்சி.  8ம்நாள் தேவதை அம்சுமான், தானங்கள் சந்தனகட்டை, பூக்கள், முளம், ஆர்த்ரகம்.  9ம் நாள் தேவதை இந்திரன், தானங்கள் சிரார்த்தபிண்டம், கன்யா, சௌபாக்யத்ரவ்யம், மஞ்சள், கங்கனம்.  10ம் நாள் தேவை பர்ஜன்யன், தானங்கள் ஹரிஹரபூஜை, லட்சுமி, கௌரி பூஜைகள், சாலக்ராமம் புத்தகதானம். 11ம் நாள் தேவதை விஷ்னு, தானங்கள் யானை குதிரை, ராஜ்யத்திர்க்கு சேனைக்கு தரவாம்.  12ம் நாள் தேவதை பிரம்மா, தானங்கள் எள், ஷோடதானங்கள், அறும் ஆகியவைகள் ஒவ்வொரு நாளும் வழங்க மகாபுஷ்கர காலங்களில் பொதுமக்களுக்கு தானம்செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், கல்வி உதவியான புத்தகம், எழுதுபொருள் கொடுத்து உதவினால் மேலும்நன்மை பெருகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை காவிரி மகாபுஷ்கரத்தில் 1.5 டன் எடைகொண்ட 8 அடி உயர காவிரி தாய் சிலை கங்கையானவள் மயிலாடுதுறை துலாக்கட்க்காவிரியி மூழ்கி தனது பாவங்களை போக்கிக்கொண்ட இடத்தில் காவிரி அன்னைக்கு சிலை வைக்க முடிவெடுக்கப்பட்டது.மயிலாடுதுறையில் உள்ள பக்தர்கள் சாதி, மத, கட்சிப்பாகுபாடின்று  ஒன்றினைந்து செயல்பட்டு வருகின்றனர். துலாக்கட்டத்தின் தென்கரையில்  அரசமரத்தடியில் காவிரித்தாய்க்கு சிலை வைக்க முடிவெடுக்கப்பட்டு  இப்பணியை முழுமையாக   ஜெனிஃபர்பவுல்ராஜ் காவிரித்தாய்க்கான சிலையை மாமல்லபுரத்தில் தயாரித்தார். 1.5 டன் எடைகொண்ட அந்த சிலை அடிபீடத்துடன் 8 அடி உயரத்தைக்கொண்டுள்ளது.  இந்த சிலை 10ம்தேதிகாலை 10.00மணிக்கு சிவாச்சார்யார்களால் பூஜைசெய்து பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.  ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் காவிரி அன்னை சிலையை வணங்கிசெல்கின்றனர்.           

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • odingaelectionkenya

  கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

 • serina_wed_photos

  டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

 • Newyork_Fire

  நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

 • mikro_yogiii

  பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

 • sothnai_jaya

  21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்