SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் தெப்ப திருவிழா

2017-09-12@ 12:50:52

வலங்கைமான்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இது சக்திஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர். அதேபோன்று ஆவணி மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழைமையான நேற்று முன்தினம் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

கோயில் அருகே உள்ள புனித குளத்தில் தெப்பத்தில் அமர்ந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக வீதியுலா காட்சி நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பக்குளத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவகுமார், தக்கார் தமிழ்மணி மற்றும் கோயில் பணியாளர் செய்திருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்