SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி துலாக்கட்டத்தில் 24 மணி நேரமும் புனிதநீராட சிறப்பு ஏற்பாடு

2017-09-12@ 12:49:37

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழா இன்று தொடங்கியது. காவிரி துலாக்கட்டத்தில் 24 மணி நேரமும் பக்தர்கள் புனித நீராடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காவிரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும் குருபெயர்ச்சி காலத்தில் கொண்டாடப்படும் விழா. புஷ்கர காலங்களில் காவிரியில் நீராடுவதால் பலவகை தோஷங்கலான பிதுர்தோஷம், ஹத்திதோஷம், நதிதோஷம் நீங்கி வறுமை, பஞ்சம், அகன்று செழுமையடைந்து உலகம் சுபிட்சம்பெருகும். மேலும் முதாதயர்களுக்கு திதி, தர்ப்பண்ஙகள் கொடுத்து பாவங்களை போக்கிகொள்ளலாம். காவிரிபுஷ்கரம் இன்று தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த 12 நாட்களில் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கள் கிடைக்கும். கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புன்னிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கிகொள்ள ஐப்பசி (துலாம்) மாதத்தில் மயிலாடுதுறை காவிரிதுலாக்கட்டத்தில் 30 நாட்கள் தங்கி புனிதநீராடி பாவங்களை போக்கிகொண்டது என்பது ஐதீகம். இத்தலம் காசிக்கு இணையான தலமாக கருதபபடுகிறது. அதனால் மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழாவிற்காக பக்தர்கள் புனித நீராடுவதற்காக ரிஷபதீர்த்த மண்டபத்தை சுற்றி 100மீ நீளத்தில் நீத்தேக்கம் அமைக்கப்பட்டு நீர்த்தேக்கத்தில் உள்ள பழங்கால கிணறுகள் 12ம் சீரமைக்கப்பட்டுள்ளது. போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. பக்தர்கள் காவிரியில் புனித நீராடலாம். கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் 12 நாட்களும் இரவு, பகல் பாராமல் 24 மணி நேரமும் பக்தர்கள் காவிரி துலாக்கட்ட நீர்த்தேக்கத்தில் புனித நீராடலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் புஷ்கரம் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்