SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாடுதுறை காவிரி மகாபுஷ்கரத்தில் நீராடினால் புண்ணியம் ஏன்?

2017-09-12@ 12:44:52

முப்பத்து முக்கோடி தேவர்கள் தாம்செய்த பாவங்களையெல்லாம் கங்கை நதியில் நீராடிப் போக்கிக்கொண்டனர். இப்பாவங்கள் அனைத்தும் ஓர் உருக்கொண்டு கங்கையை உருமாறச் செய்துவிட்டது.  கங்கையானவள் தனது நிலைமை இறைவனிடம் தெரிவித்து தனது பழைய உருவம் வேண்ட இறைவன் ஐப்பசி மாதம் கடைசிநாள் மயிலாடுதுறை காவிரி ரிஷப தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் உனது பழைய உருவம் கிடைக்கப்பேறும் என்று தெரிவித்தார்.  காவிரியில் குளிக்கும் அந்த நாளை எதிர்பார்த்து கங்கையானவள் காசி மாநகரை விட்டுப் புறப்பட்டு மயிலாடுதுறை நோக்கி வந்தாள்.  கங்கையைக் காணாத காசி விஸ்வநாதர்தனது துணைவி விசாலாட்சி, துண்டிவிநாயகர் காலபைரவர்ஆகிய பரிவாரங்களுடன் திருமயிலாடுதுறைக்கே எழுந்தருளிவந்துவிட்டார்கள்.

இந்த நன்னாள் ஐப்பசி கடைசிநாளில்(30ம்நாள்) காவிரியில் மூழகி கங்கை தனது பாவங்களை போக்கிக்கொண்ட நாளாகம்.  கங்கையினது வேண்டுகோளுக்கு இணங்க அப்போதிலிருந்து காசி விஸ்வநாதர் மற்ற பரிவாரங்களுடன் துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்து அருள்பாலித்து வருகின்றனர்.  திருவையாற்றிலிருந்து மாயூரத்திருத்தலத்திற்கு வந்த அருள்மிகு ஐயாரப்பர் தனது பரிவாரங்களுடன் மயிலாடுதுதுறையிலும் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்கள் என்றால் இந்நகரில் புனிதமும் மக்களின் பெருமையும் சொல்லுதற்கரியதாகும்.

கங்கை புனித நீராடிய மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இந்த மகாபுஷ்கரம் நடைபெறுவதால் இங்கே புனித நீராடினால் 1000 முறை கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம் அதனால் காவிரி ஆற்றில் 22 இடங்களில் இந்த மகாபுஷ்கரம் நடைபெற்றாலும் மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் புனித நீராடுவதே மிகச் சிறப்பு என கருதப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jatayu_bird11

    200 அடி நீள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன், பறவைகள் சரணாலயம் : கேரளாவில் உருவாக்கம்

  • othigai_111sunami

    கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை: பெசன்ட் நகரில் பொதுமக்கள் அச்சம்

  • chennai_udall11

    உடல் உறுப்புதான வார விழா : உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

  • SnowfallnorthernIndia

    வட இந்தியாவில் தொடங்கியது பனிப்பொழிவு: குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீ மூட்டும் மக்கள்

  • goa_train_acc

    கோவாவில் இருந்து பாட்னா சென்ற விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்