SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்த அலை வீசும்..!

2017-09-07@ 13:00:26

இருபத்தெட்டு வயதாகும் என் மகளுக்கு நிறைய வரன்கள் வருகின்றன. ஆனாலும் திருமணம் கைகூடாமல் தள்ளிப் போகிறது. என் மகளுக்கு திருமணம் கூடி வர நல்லதொரு பரிகாரம் கூறுங்கள். வேல்முருகன், திருநெல்வேலி.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி நடக்கிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் சூரியன், குரு, சுக்கிரன் என மூன்று கிரகங்களின் சேர்க்கையும், எட்டாம் பாவத்தில் செவ்வாயின் அமர்வும் திருமணத் தடையை உண்டாக்கியுள்ளது. எனினும் தற்போது நடைபெற உள்ள குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளதால் இந்த வருடத்தில் திருமணம் நடக்கக் காண்பீர்கள். உங்கள் ஊரிலிருந்து கிழக்கு திசையில் மாப்பிள்ளையைத் தேடுங்கள்.

மாப்பிள்ளையின் சொந்த ஊர் அந்தப்பகுதியில் அமைந்தாலும் அவர் தொலைதூரத்தில் பணிபுரிபவராக இருப்பார். திருமணத் தடை நீங்கவும், மகளுடைய மணவாழ்வு மங்களகரமாக அமையவும் சங்கரன்கோவில் திருத்தலத்திற்குச் சென்று கோமதியம்மனையும், சங்கர நாராயணஸ்வாமியையும் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருமணத்தை அவர்தம் சந்நதியிலேயே நடத்துவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் அம்பிகையை வணங்கிவர விரைவில் திருமணம் கைகூடும்.

“மங்கள மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே.”


எனது மகனுக்கு 2015ல் திருமணமாகி அவன் மனைவி ஒரு வாரம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தாள். பிடிக்கவில்லை என்று தாய் வீட்டிற்குப் போன அவரொரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பின்பும் புகுந்த வீட்டிற்கு வரவில்லை. வயதான காலத்தில் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். உரிய பரிகாரம் சொல்லுங்கள். கல்யாணி, மும்பை.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. விளையாட்டாக உங்கள் மகன் சொன்ன ஒரு வார்த்தை அந்தப் பெண்ணின் மனதை மிகவும் புண்படுத்தி இருக்கிறது. உங்கள் மகன் அவரது வீட்டிற்குச் சென்று மனம் விட்டுப் பேசினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இயலும். வறட்டு கௌரவத்தை விடுத்து, தனது மனைவியைச் சந்தித்துப் பேச சொல்லுங்கள். தொலைபேசியில் பேசுவது தீர்வினைத் தராது.

இருவரது சந்திப்பும் ஏதேனும் ஒரு ஆலயத்தில் அமைந்தால் நல்லது. தற்போதைய சூழலில் கிரகங்களின் பலம் நன்றாக உள்ளதால் உடனடியாக அவர்களின் சந்திப்பிற்கு உரிய ஏற்பாட்டினைச் செய்யுங்கள். பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் சூரிய உதயகாலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். வீட்டுப் பூஜையறையிலேயே உங்கள் வழிபாட்டினைத் தொடரலாம். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி துர்க்கையை வணங்கிவர பிரிந்தவர்கள் ஒன்றிணைவர். கவலை வேண்டாம்.

“அயிரண துர்மத சத்ரு வதோதித துர்தரநிர்ஜரசக்தி ப்ருதே
சதுரவிசார துரீணமஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபதே.”


திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறவில்லை. எங்கள் இருவருக்கும் பொருத்தம் நன்றாக உள்ளதா? என் கணவரின் குடும்பத்தில் மூத்தவருக்கு திருமணம் ஆகி 12 வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்? ராஜாத்தி.

திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆனநிலையில் பொருத்தம் நன்றாக உள்ளதா என்று கேட்பது மட்டுமல்ல, நினைப்பது கூடத் தவறு. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கும், திருவாதிரை நட்சத்திரம், மிதுன  ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவருக்கும் பொருத்தம் என்பது மிக நன்றாக உள்ளது. குடும்பத்தில் மூத்தவருக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையே என்ற பயமும், மனதில் தோன்றியுள்ள சந்தேகமும்தான் உங்களுக்கு பிரச்னையாக உள்ளது. வீணான மனக்குழப்பத்தினை விடுத்து நம்பிக்கையோடு குடும்பம் நடத்தி வாருங்கள்.

28.01.2018க்குள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. உங்கள் இருவர் ஜாதகத்திலும் குழந்தை பாக்கியத்தைத் தரும் புத்திரகாரகனான குருபகவான் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பது பலம் வாய்ந்த அம்சமாகும். தொடர்ந்து 16 வாரங்களுக்கு வியாழன் தோறும் விரதம் இருந்து, வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினை 16 முறை சொல்லி குருபகவானை வழிபட்டு வாருங்கள். குரு பகவானின் திருவருளால் விரைவில் வம்சம் விருத்தி அடையக் காண்பீர்கள்.

“தேவமந்த்ரீ விசாலாக்ஷ: ஸதா லோகஹிதேரத:
அநேக புத்ர ஸம்பூர்ண: பீடாம் ஹரது மே குரு:”


மூன்றரை வயது ஆகும் என் மகன் இன்னும் சரியாகப் பேசவில்லை. சுறுசுறுப்பாக விளையாடுகிறான். ஜாதகரீதியாக இனிவரும் காலங்களில் அவனே நன்றாகப் பேசுவான் என்று எங்கள் குடும்ப ஜோதிடர் சொல்கிறார். அவனுக்கு மருத்துவ ரீதியாக வைத்தியம் பார்க்க வேண்டுமா அல்லது அதுவாகவே சரியாகுமா? எங்கள் கவலையைத் தீர்க்க வேண்டுகிறேன். தனலட்சுமி, திருச்சி.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனிதசை நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்திலேயே சூரியன், புதன், சனி, ராகு என நான்கு கிரகங்களின் இணைவினைப் பெற்றுள்ளதால் உங்கள் குடும்ப ஜோதிடர் சொல்வதுபோல் மிகவும் பலம் பொருந்திய ஜாதகத்தினை உங்கள் மகன் பெற்றிருக்கிறார். எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் பலம் அவரது உடலிலும், உள்ளத்திலும் குடியிருக்கும். எனினும் ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் மூன்றாம் பாவத்தில், கேதுவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பது லேசான பிரச்னையைத் தோற்றுவித்திருக்கலாம். காது மற்றும் தொண்டைப் பகுதியில் தொந்தரவு ஏதேனும் உள்ளதா என்று உரிய மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

சிறு வயதிலேயே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு விட்டால் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தற்போது நேரம் நன்றாக உள்ளதால் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்கு உங்கள் மகனை அழைத்துச் செல்லுங்கள். 19.02.2018க்குள் இந்தப் பிரச்னை காணாமல் போகும். சமயபுரம் மாரியம்மனுக்கு உங்கள் பிள்ளையின் கைகளால் வெள்ளியில் காதுமடல் சமர்ப்பிப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். புத்திக் கூர்மையால் உங்கள் பிள்ளை உலகாளுவான்.

நான் இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த சில வருடங்களாக கடன் பிரச்னை, வீட்டுக் கட்டிடம் பழுதடைதல், மனைவிக்கு மருத்துவச் செலவு, மகளின் காதல் திருமணத்தால் அவமானம், கடன் பிரச்னையால் தம்பியின் தலைமறைவு, மகளின் குடும்பச் சண்டை என நிம்மதியின்றி தவிக்கிறோம். நடைப்பிணமாக வாழ்ந்து வரும் எங்களுக்கு ஒரு நல்ல தீர்வினைச் சொல்லுங்கள். ஆனந்தன், புதுச்சேரி.

பிரச்னைகள் என்பது வாழ்வினில் ஓர் அங்கம். அதை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வதே பிரச்னையாகி விடும். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகள் எல்லோர் குடும்பத்திலும் உண்டு. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், அவற்றைத் தாங்கும் சக்தியினை இறைவன் நமக்கு அளித்திருக்கிறானே என்று எண்ணி உற்சாகத்தோடு செயல்படுங்கள். பிரச்னைகளை மட்டும் நினைத்துக் கொண்டிருக்காமல் உங்கள் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

28.11.2017க்குப் பின் தொழில் முறையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் உண்டாகும். உங்கள் திறமையை வெளிப்படுத்தி புதிய பாதையில் பயணிப்பீர்கள். வருமானம் பெருகும்போது உங்கள் பிரச்னைகள் அனைத்தும் காணாமல் போய்விடும். செவ்வாய் தோறும் காலை வேளையில் மொரட்டாண்டி பிரத்யங்கிராதேவி ஆலயத்திற்குச் சென்று அம்பிகையை தரிசித்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மனதில் தைரியமும், புத்துணர்ச்சியும் பெருகக் காண்பீர்கள். அம்பிகையின் அருளால் அடுத்த வருடம் முதல் உங்கள் குடும்பத்தில் ஆனந்த அலை வீசும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HarrY_MeghanMarkel

  கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

 • Yelagirisummerceremony

  ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

 • kodai_flower

  கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

 • subwaymodi

  சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

 • 20-05-2018

  20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்