SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுருளி அருவியில் ஆதி அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம்

2017-09-07@ 12:52:43

உத்தமபாளையம்: கம்பம் அருகே உள்ள சுருளி அருவி இயற்கையிலேயே புண்ணியபூமியாக விளங்குகிறது. இங்குள்ள சுருளிவேலப்பர் கோயில், கைலாயநாதர் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற தலங்களாக உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்குள்ள ஆதி அண்ணாமலையார் வட்டதிருக்கோயில் சுருளி அருவியின் நுழைவு பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் தேனி, போடி, கம்பம், உத்தமபாளையம், கூடலூர், ராயப்பன்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆதி அண்ணாமலையார் வட்டக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதில் சிவனாடியார்கள் பங்கேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தினர். பின்பு கலசநீர் கொண்டு கும்பாபிஷேகம் நடத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்