SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் பவித்ரோற்சவம் நிறைவு

2017-09-07@ 12:51:57

திருமலை: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் பவித்ரோற்சவம்  நிறைவடைந்தது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களால் ஏற்படும் தோஷ பரிகாரமாக ஆண்டு தோறும் பவித்ரோற்சவம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 4ம் தேதி பவித்ரோற்சவம் துவங்கியது. இதன் கடைசி நாளான நேற்று யாகம், மஹா பூர்ணாஹுதி, சாந்தி ஓமம், பவித்ர விசர்ஜனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பத்மாவதி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் மற்றும் பன்னீர் போன்ற மூலிகை கலவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், தெப்பகுளத்தில் சக்கரதாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார், சுந்தரராஜ சுவாமி மற்றும் ஸ்ரீகிருஷ்ண சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் பாஸ்கர், துணை செயல் அலுவலர் முனிரத்தினம் ரெட்டி, உதவி செயல் அலுவலர் ராஜு கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

  • PresidentGreeceleaders

    அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்