SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆலடிபட்டி வைத்திலிங்கசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்

2017-09-04@ 14:23:10

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே ஆலடிபட்டி வைத்திலிங்கசுவாமி கோயில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிபட்டி வைத்திலிங்கசுவாமி அன்னை யோகாம்பிகை கோயில் ஆவணி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் கடந்த 1ம் தேதி காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகமும், மதியம் ஒரு மணிக்கு பத்திரகாளியம்மனுக்கு விசேஷ பூஜையும், இரவு சுவாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், இரவு தேர் காட்சியும் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை வைத்திலிங்கசுவாமி, யோகாம்பிகை அம்பாள் திருத்தேரில் வரும் முக்கிய நிகழ்ச்சி நடந்தது.

திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அதனை தொடர்ந்து இரவு தீப ஆராதனையும், விநாயகர் மூசிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும், சுவாமி பூம்பல்லக்கில் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று  காலை ஸ்ரீவைத்திலிங்கசுவாமி அம்பாள் தீர்த்தவாரி செல்லுதல் நிகழ்ச்சியும், மாலை சுவாமி,அம்பாள் ரிஷப வாகன காட்சியும், இரவு தீப ஆராதனையும்,சுவாமி வன்னிமரத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி சௌந்திரராஜன் மற்றும் பொதுமக்கள்,பக்தர்கள் செய்து இருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்