SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவசூரியபெருமான் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

2017-09-04@ 14:21:25

திருவிடைமருதூர்: ஒவ்வோரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பிரவேசிப்பார். அதன்படி நேற்று முன்தினம் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியடைந்தார்.  இதையொட்டி திருவிடைமருதூர் திருப்பனந்தாள் அடுத்த சூரியனார்கோயிலில் சிவசூரிய பெருமான் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. அப்போது குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.  இதேபோல் உற்சவர் மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பராமச்சாரிய சுவாமி, ஆதின அம்பலவாண தம்பிரான்சுவாமி, ஆதின பொது மேலாளர் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர்கள் குருமூர்த்தி, சண்முகம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் உள்ள அபய வரதேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், கோ பூஜை, யாகபூஜை நடந்தது. பின்னர்  குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. குரு பெயர்ச்சியையொட்டி விநாயகர், அபய வரதேஸ்வரர், சுந்தரநாயகி அம்பாள், முருகன் மற்றும்  நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள்  பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்