SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கப்பியாம்புலியூர் ஐயனாரப்பன் கோயிலில் 4ம் தேதி கும்பாபிஷேகம்

2017-09-02@ 12:37:14

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டம் கப்பியாம்புலியூர் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த விநாயகர் முருகன், பூரண, புஷ்கலை சமேத ஐயனாரப்பன், புத்துமாரியம்மன், சப்தகன்னிமார், நவக்கிரகம், வீரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு நாளை காலை 8 மணிக்கு கணபதி, லஷ்மி, சுதர்சன, சண்முக, துர்கா, நவகிரக ஹோமங்களும், வாஸ்து சாந்தி, புது கற்சிலைக்கு கண் திறப்பு விழா நடக்கிறது. மாலை 4 மணிக்கு முதல்கால பூஜை ஆரம்பமாகி தீபாராதனை நடக்கிறது.

விழா குறித்து ஆலய பூசாரி சிவஸ்ரீ ரகுராமன் கூறுகையில், பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் 4ம் தேதி நடக்கிறது. காலை 7 மணிக்கு இரண்டாவது காலபூஜையுடன் தொடங்கி கோபூஜை, தனபூஜை, 108 மூலிகை யாகவேள்வி நடைபெற்று காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அன்னதானம் மற்றும் இரவு மின் அலங்காரம், வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடக்கிறது. 5ம் தேதி மண்டல பூஜை தொடங்கி 48 நாட்கள் நடைபெறும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rahl_soniyaa

    டிசம்பர் 16ல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் : ஒருமனதாக தேர்வாகிறார் ராகுல்காந்தி

  • mnao_diretor11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு டைரக்டர் மனோபாலா பரிசுகள் வழங்கினார்

  • WorldMissManishiChile

    உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மனுஷி சில்லர்: 118 நாடுகள் பங்கேற்பு

  • Okenakal

    ஓகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : படகு சவாரி செய்து உற்சாகம்

  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்