SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன?

2017-08-29@ 16:43:28

ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க மந்திரம் இருக்கிறது. வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலை விடச் சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விஸ்வாமித்திரரே ரிஷி. அதிகாலைப் பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து ஜபிக்க வேண்டும். நீராடியபின் ஜெபிப்பது சிறப்பு.

ஓம் பூர்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்


எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குகிறவரும், வணங்குவதற்குரியவரும், இவ்வுலகத்தைப் படைத்த கடவுளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழிநடத்துவாராக.'' மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும் உச்சரிக்கப் பழகுங்கள். முடியாவிட்டால், பொருளை மனப்பாடமாக்கிக் கொண்டு தொடர்ந்து சொல்லி வாருங்கள். இந்த மந்திரத்தை ஜபிக்க மனத்தூய்மை பெருகும். மனம் வலிமை பெறும். ஞாபகசக்தி அபரிமிதமாக உண்டாகும். உங்களுக்குப் பிடித்தமான எந்த தெய்வத்தையும் மனதில் தியானிக்கலாம். காயத்ரி பெண்தேவதை என்பதால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், நம்பிக்கையோடு இம்மந்திரத்தை ஜபித்து நன்மை பெறலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-11-2017

  19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • odingaelectionkenya

  கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

 • serina_wed_photos

  டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

 • Newyork_Fire

  நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

 • mikro_yogiii

  பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்