SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

2017-08-29@ 12:38:05

பாபநாசம்: பாபநாசம் அடுத்த அய்யம்பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, 25ம் தேதி காலை கஜபூஜை, யாக சாலை நிர்மாணம், சோம கும்பபூஜை, யாத்ரா ஹோமம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. 26ம் தேதி இரண்டாம்கால யாகபூஜை, மூன்றாம்கால யாகபூஜை நடந்தது. நேற்று முன்தினம் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர்  அடுத்த திருபுவனம் கீழவீதியில் கோதாண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடைசியாக 1999ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலில் திருப்பணி செய்து கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 24ம் தேதி சிறப்பு ஹோமம், வாஸ்து பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 25ம் தேதி காலை காவிரி ஆற்றங்கரையிலிருந்து புனிதநீர் கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்