SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி அருகே காசிவிஸ்வநாதர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி

2017-08-24@ 12:34:57

திருச்சி: திருச்சி அருகே சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதசுவாமி கோயிலில் நேற்று சிவலிங்கம் மீது சூரிய ஒளி படர்ந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. இதைக்காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். திருச்சி கல்லணைரோடு பனையக்குறிச்சி சர்க்கார்பாளையத்தில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பழமையான காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை நடக்கும். இதில் சூரிய உதயத்தில் தொடங்கி காலை 6 மணி முதல் 6.30 மணி வரை சூரிய ஒளி கோயிலில் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகம் இட்டது போல் ஜொலிக்கும்.

இந்த நிகழ்வை சூரிய வழிபாடு என்று புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் சூரிய வழிபாடு நடை பெறும். இந்நிலையில் சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் படும் நேரத்தில் சுவாமியை வழிபட்டால் சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
முதல் நாளான நேற்று காலை காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் மூலவர் சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டு ஜொலித்த சிவலிங்கம் பிரகாசமாக காட்சியளித்த இந்த அரிய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

  • SharjahLightFestival

    ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

  • aircrashsearching

    ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

  • duofestivalsouthkorea

    தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X