SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவருள் பொழியும் திருச்செங்காட்டங்குடி

2017-08-23@ 14:56:20

மூலப் பரம்பொருளாகிய விநாயகப் பெருமான் கஜமுகாசுரனை அழித்த தலம். அந்த அசுரனின் ரத்தம் படிந்து ஊரே செங்காடாக மாறியதால் திருச்செங்காட்டங்குடி  என்று பெயர் பெற்றது. கணபதீஸ்வரம் என்ற பெயரிலும்  இத்தலம் அழைக்கப்படுகிறது. கஜமுகாசுரனை கொன்ற பாவம் தீர விநாயகப் பெருமான் இத்தல  உத்திராபதீஸ்வரரை வழிபட்டுள்ளார். இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மண்டபம் உயரம் மிகவும் குறைவாக உள்ளதால், அம்மண்டபத்தில் மண்டியிட்டபடிதான்  தரிசிக்க முடியும். பல்லவ மன்னனின் சேனாதிபதியாகப் பணியாற்றிய சிறுதொண்டரான பரஞ்சோதி, வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் புரிந்து வெற்றி  வாகை சூடியபோது கொண்டு வந்த கணபதிதான் இவர். அதனால் இவர் வாதாபி கணபதி என்று வணங்கப்படுகிறார். இவரின் துதிக்கை வலம்புரியாக உள்ளது  சிறப்பு. இவரிடம் வேண்டியது வேண்டியவாறே நடக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினம் ஒரு சிவனடியார்க்கு உணவு படைக்கும் சிவத்தொண்டைப் புரிந்த சிறுத்தொண்டரும் அவர் மனைவி திருவெண்காட்டுமங்கையும் ஒரு முறை சிவனடியார்  உருவில் வந்த ஈசன் கேட்டபடி தங்கள் மகன் சீராளனையே வெட்டி சமைத்து உணவாக்கி விருந்தளித்து, பின் ஈசன் அருளால் அவனை மீண்டும் பெற்ற தலம்.  பிள்ளைக் கறியமுது படைத்த சிறுத்தொண்டருக்கு அருள்புரிந்த பைரவ வடிவிலேயே இத்தல ஈசன் அருட்காட்சியளிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரை மாத பரணி  நட்சத்திர நாளில், பிள்ளைக் கறியமுது வைபவம் நடைபெறுகிறது. அப்போது பாவனையாக பிள்ளைக் கறியமுது நிவேதனம் செய்யப்படுகிறது. அரிசிமாவு,  வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய், அரிசி, திப்பிலி, வால்மிளகு ஆகியவற்றைச் சேர்த்து சீராளன் பொம்மை செய்யப்படுகிறது.

உண்மை பக்தனின் பக்தி உணர்வை இந்த வையகத்திற்கு தெரியப்படுத்த ஈசன் செய்த திருவிளையாடலாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. குழந்தை பாக்கியம்  வேண்டுவோர் அந்த பொம்மையை பிரசாதமாக வாங்கி உண்டால் ஈசன் அருளால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிட்டுகிறது. பல்லவர் கால சிற்பங்களான
நவ தாண்டவ சிற்பங்களை இத்தலத்தில் தரிசிக்கலாம். சிறுத்தொண்டருக்கு அருள் புரிந்த காட்சியை தானும் காண விரும்பினார், ஐயடிகள் காடவர்கோன்.  ‘சித்திரை திருவோண நாளில் கும்பாபிஷேகம் நடத்தினால் செண்பகப்பூ மணம் வீச காட்சி தருவேன்’ என்று ஈசன் உரைத்தார்.

அதன்படி ஐம்பொன்னால் ஈசனின் திருவுருவை அமைக்க முயன்றபோது இடர் வரவே, ஈசனே உலைக்களத்தில் கொதித்துக் கொண்டிருந்த உலைக்குழம்பை  உட்கொண்டு, சிலையாக உருக்கொண்டாராம். கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இத்தலம் வழிபடப்பட்டு வருகிறது. ஆலயத்தில் முதலாம் ராஜராஜன்  காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆலயத்தில் உள்ளஅழகு மிளிரும் கால சம்ஹாரமூர்த்தியின் சிற்பம் தரிசிக்கப்பட வேண்டிய ஒன்று. இத்தலம்  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்