SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் பூரண கொழுக்கட்டை

2017-08-23@ 14:54:44

கொழுக்கட்டை மேல் மாவுக்கு

பச்சரிசி  - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - அரை கப்
கொழுக்கட்டை பூரணத்திற்கு: தேங்காய்  ஒன்று
பாகு வெல்லம் துருவியது  முக்கால் கப்
ஊற வைத்த கடலைப்பருப்பு  இரண்டு டேபிள் ஸ்பூன்  அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

மேல் மாவு செய்முறை:


பச்சரிசியை ஒருமணிநேரம் ஊறவைத்து மிக்சியில் தோசை மாவை விட ஒரு பதம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதை அடிகனமான கடாயில்  (இண்டாலியம் கடாய் இருந்தால் நலம்) சிறிது எண்ணெய் (ஒரு டீஸ்பூன்) விட்டு கை விடாமல், அரிசிமாவையும், ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து  transparentடாக ஆகும் வரைக் கிளறவும். இந்த முறையில், மேல் மாவு தடியாக இல்லாமல் மெல்லிசாக ரப்பர் போல இழுத்த இழுப்புக்கு வரும். வேண்டும்  என்றால் அரிசிமாவை பாதிப்பாதியாகப் பிரித்து இரண்டு தரம் கிளறலாம். கிளறிய மாவு சிறிது வெதுவெதுவென ஆறினதும், இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய்  விட்டு கையால் சப்பாத்தி மாவு போல அழுத்திப் பிசையவும். மாவை சுத்தமான  ஈரத் துணியில் சுற்றி வைக்கவும்.

பூரணம் செய்ய:

ஒரு தேங்காயை ஓடில்லாமல் துருவிக்கொள்ளவும். ஒரு கரண்டி தண்ணீரில் வெல்லத்தை நன்றாக கரைத்துக் கொண்டு, வடிகட்டி பின் ஒரு  அடிகனமான கடாயில் ஒரு கம்பி பதத்திற்கு வரும் வரை பாகு காய்ச்சவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு (சிம்மில் வைத்து), இதில் துருவிய தேங்காய்,  கடலைப்பருப்பு அரைத்த விழுது மற்றும் ஏலக்காய் பொடியைப் போட்டு பூரணம் உருண்டு வரும் வரை கிளறிக் கொள்ளவும். உள்ளங்கையில் நல்லெண்ணெய்  தடவிக்கொண்டு மாவை மெல்லிசான தட்டை போலசெய்து, நடுவில் சிறிது பூரணம் வைத்து மூடவும். இதை இட்லி குக்கரில் வேக விட்டு எடுத்து நிவேதிக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2019

    22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்