SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜவிநாயகருக்குத் தேங்காய் மாலை பிரார்த்தனை

2017-08-23@ 14:44:46

திருச்சி

பொதுவாக விநாயகரிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் நன்றிக் கடனாக விநாயகருக்கு அர்ச்சனை செய்வார்கள்  அல்லது அவருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை வைத்து நைவேத்தியம் செய்வார்கள். ஆனால், உரித்த முழுத் தேங்காய்களை மாலையாகக் கட்டி சூட்டும்  வழக்கம் அபூர்வமானது. அந்த வழக்கம், திருச்சி அருகே முருகவேல் நகரில் உள்ள ராஜ விநாயகர் ஆலயத்தில் பின்பற்றப்படுகிறது. ஆலயம் தென்திசை நோக்கி  அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் நீண்ட நடைபாதை. தொடர்ந்து மகாமண்டபம். மகாமண்டபத்தில் இடதுபுறம் ஸ்வாகத கணபதி, வள்ளி-தேவசேனா சமேத  கல்யாண சுப்ரமணியர் ஆகியோர் தனித்தனி சந்நநிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இடதுபுறம் நெடிதுயர்ந்த தலவிருட்சமான அரசமரமும் அதனடியில் நாகம்மா சிலையும் உள்ளன. நாகம்மாளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகுகாலத்தில்  பால் அபிஷேகம் செய்தால் ராகு-கேது தோஷம் நீங்குகிறது என்கிறார்கள். இந்த அரசமரத்துடன் வேப்பமரமும் இணைந்து காட்சி தருகிறது. வலதுபுறம்  ஆஞ்சனேயர் சந்நநிதி. அடுத்துள்ள மகாமண்டபத்தில் வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருட்பாலிக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் பலிபீடமும்,  மூஞ்சூறும் முன்நிற்க கீழ்திசை நோக்கி அருள்மிகு ராஜவிநாயகர் பேரழகுடன் அருள்புரிகிறார்.

விநாயகரின் தேவகோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் வடபுறம் விஷ்ணு துர்க்கையும் அருட்பாலிக்கின்றனர். சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், சுக்ல  சதுர்த்தி போன்ற நாட்களில் ராஜவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று ராஜவிநாயகர் வீதியுலா வருகிறார்.  மாசிமாத சஷ்டியில் விநாயகருக்கு ஏகதின லட்சார்ச்சனை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு  பயன்பெறுகின்றனர். கிருத்திகை நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. மாத மூல நட்சத்திரத்தின் போதும், சனிக்கிழமைகளிலும்  ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் கார்த்திகை சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும் நடைபெறுகின்றன. இங்குள்ள விஷ்ணு துர்க்கை மிகவும்  சக்தி வாய்ந்தவள்.  

வெள்ளிக்கிழமை ராகுகால பூஜையிலும், பௌர்ணமி அன்று மாலை நடைபெறும் அபிஷேக ஆராதனையிலும் ஏராளமான பெண்கள் கலந்துகொள்கின்றனர்.  விஷ்ணு துர்க்கைக்கு ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜையும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவ வைபோகமும்  நடைபெறும்.நவராத்திரி ஒன்பது நாட்களும்  உற்சவர் துர்க்கை அம்மனுக்கு தினந்தினம் விதவிதமான அலங்காரங்களும், சிறப்பு பூஜைகளும், ஹோமமும்  நடைபெறுகின்றன.கோயிலில் தினசரி இரண்டுகால  பூஜைகள் நடக்கின்றன. காலை 8 முதல் 10.30, மாலை 5 முதல் 7.30 மணிவரை திறந்திருக்கும். சுமங்கலிப் பெண்கள் தங்களுக்கு நல்வாழ்க்கை மற்றும் குழந்தை  வரம்வேண்டி துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்து மகிழ்கின்றனர். கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவாகத் திருமணம் நடக்கவேண்டி ராஜவிநாயகரை  பிரார்த்தனை செய்கின்றனர்.

கோரிக்கைகள் உடனே நிறைவேறிவிடுவதுதான் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு. தங்கள் கோரிக்கை பலித்ததும்  உரித்த முழுத்தேங்காய்களை மாலையாகக்கட்டி  அதை ராஜ விநாயகருக்கு அணிவித்துத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் பக்தர்கள். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே.நகர்  செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது முருகவேல் நகர் ராஜவிநாயகர் கோயில்

- ஜெயவண்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

 • 18-01-2019

  18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • rivermoon

  வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்