SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரங்கள் அருளும் வரசக்தி விநாயகா சரணம்!

2017-08-23@ 14:28:27

தமிழாகி, அறிவாகி, தவமாகி, வரமாகி
அருவாகி, உருவாகி, ஆனந்த வடிவாகி
அறமாகி, மறமாகி, அற்புத மூர்த்தியாகி
ஆல், அரச நிழலில் தவமாய் வீற்றிருக்கும்
அம்பிகை புதல்வனை பணிவோம்!
முதலாகி, மூப்பாகி
முடிவிலா தொடக்கமாகி
தொடக்கமிலா முடிவாகி
மூலப்பொருளாகிய மூஞ்சுறுவாகனன்
முக்குறுணி விநாயகா சரணம்!
துணிந்து தருவாய் தந்தமதை
தும்பிக்கையான் நம்பிக்கையால்
பணிந்து இயற்றுவேன் காப்பியம்!
கனிந்த அனுபவ மனதில்
கற்பனைக்கு கற்பகவிநாயகன் காப்பு!
அன்னம் பிசைந்து ஊட்டும்
அன்னை கைகளில் உருவான
அன்னவிநாயகா அறிவு திறந்தாய்!
அன்பு முதற்பொருள் வடிவானாய்
அத்தன் தேர்கால் அச்சுமுறித்து
ஆரம்ப கடவுளாய் பதவிபெற்றாய்!
மவுனகுரு ஆசி பெற்றால்
மனதில் நீரோடை எண்ணம்
மகிழ்ச்சி, தெய்வமணம் பெருகி
முகம் கோடிமலராய் ஒளிரும்!
பாதாள கணபதியை பணிந்து
பாவம் நீங்கி வாழ்வோம்!
சித்தி, புத்தி என்றால் வெற்றி, ஞானம்
வாழ்வில் கைசேர நாயகன் துணை!
பஞ்சபூதங்கள் ஆதாரமான
களிமண்ணால் பிள்ளையார் செய்து
கருத்தில், மனதில் பக்தி செலுத்தினால்
புத்திக்கூர்மை சிறந்து பெருகும்
‘தலையில் என்ன களிமண்ணா’
என்றுரைப்பவர் அவச்சொல் நீங்கும்!
விருப்பம் தீர்க்கும் விநாயகனுக்கு
பக்தனின் எளிய விண்ணப்பம்!
மகிழ்ச்சியாய் குடும்பத்தில் குலாவிடும்
குறையில்லாத வாழ்வு! நோயில்லா தேகம்!
தேவைக்கேற்ப நிதி!
கருத்தில் நற்சிந்தனை கவிதை!
உடுத்த தூய பட்டாடை!
பாலும், பழமும், உணவும்
பசித்தவருக்கு விருந்து தரும் வசதி!
வஞ்சனையில்லா நல்லோர் நட்பு
பஞ்சணையில் ஆழ்ந்த தூக்கம்!
தடையின்றி வரமாய் தந்தருள்
வரசக்தி விநாயகா சரணம்!

- விஷ்ணுதாசன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்