SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருக்கன்குடி கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

2017-08-12@ 12:57:24

சாத்தூர்: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், அக்னிசட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4ம் தேதி கொடியெற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதிகாலை உற்சவ மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். சிறப்பு மற்றும் பொது தரிசன பகுதியில் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை போட்டும், பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏந்தியும், அங்கபிரதட்சணம் செய்தும் அம்மனை தரிசனம் செய்தனர். மதியம் 3 மணி அளவில் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது. உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கோயிலில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. நெல்லை, மதுரை, சங்கரன்கோயில், தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் வில்வமூர்த்தி சிறப்பாக செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

LatestNews

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X