SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

2017-07-17@ 17:32:35

வேலூர்: ஆடிமாதம் முதல்நாளான இன்று காலை வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி முதல் நாள் இன்று தொடங்கியது. காலை முதலே அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அம்மன், வேலூர் காட்பாடி சாலையில் விஷ்ணு துர்க்கையம்மன், சத்துவாச்சாரி ரங்காபுரம் பூங்காவனத்தம்மன், தோட்டப்பாளையம் படவேட்டம்மன், சைதாப்பேட்டை மலையடிவாரம் தேவி கருமாரியம்மன், வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன், கலாஸ்பாளையம் முத்துமாரியம்மன், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து வரும் 21ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அன்று முதல் தொடர்ந்து 5 வாரங்களில் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூழ்வார்த்து, பொங்கல் வைத்தும் வழிபடுவார்கள். ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • duussera_festivalll1

    குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • 22-09-2017

    22-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • MEXICOEArthqauke

    நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மெக்சிகோ நகரம்: மீட்பு பணிகள் தீவிரம்!

  • KAMAL

    நடிகர் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு: அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையா?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்