SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்னை மரத்தை அலங்கரித்து 40 ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன் : சேலம் பக்தர்கள் வினோத வழிபாடு

2017-07-17@ 17:31:53

பாலக்கோடு: பாலக்கோடு அருகே குலதெய்வ கோயில் இருந்த இடத்தில் உள்ள தென்னை மரத்தை அலங்கரித்து, 40 ஆடுகள் பலியிட்டு சேலம் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அமானிமல்லாபுரத்தில் முதலியார் தோட்டம் உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பில், சேலம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் முகாமிட்டனர். அவர்கள் தோட்டத்தில் இருந்த பழமையான முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தங்களுடைய குலதெய்வம் இருந்த இடத்தில் தற்போது தென்னை மரம் உள்ளதால், அந்த மரத்தை அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். 40க்கும் மேற்பட்ட ஆடுகளை சுவாமிக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின் படையலிட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானமாக படையல் உணவை வழங்கினர்.

தொடர்ந்து, 750க்கும் மேற்பட்ட பக்தர்களும் 18 குழுக்களாக பிரிந்து, தர்மபுரி, போச்சம்பள்ளி, பாரூர், ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு எருது ஆட்டத்தில் கலந்து கொண்ட எருதுகளை தேர்வு செய்து வருகின்றனர். இந்த குழுக்களானது, வரும் 19ம் தேதி சேலத்தில் ஒன்றாக இணைகின்றன. சேலம் நெய்க்காரப்பட்டியில் அன்று நடக்கும் மூங்கில்குத்து முனியப்பன் கோயிலில், அந்த எருதுகளை ஓடவிட்டு எருதாட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து சேலம் பக்தர்கள் கூறுகையில், சேலம் நெய்க்காரப்பட்டியில் மூங்கில்குத்து முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் எருதாட்ட திருவிழா நடக்கும். அதன்படி வரும் 19ம் தேதி எருதாட்டம் நடக்கிறது.

இந்த நேரத்தில் 18 கிராமங்களை சேர்ந்த நாங்கள் ஒன்றாக தர்மபுரி அமானிமல்லாபுரம் வருவோம். பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து செல்வோம். எங்களுடைய முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வம் இருந்த இடத்தில் தென்னைமரத்தை அலங்கரித்து வழிபாடு நடத்துவோம். 3 நாள் தங்கியிருந்து ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடனும் செலுத்துவோம். அதன்பின் எருதுகள் தேர்வு செய்து, மூங்கில்குத்து முனியப்பன் கோயிலுக்கு சென்று திருவிழாவில் கலந்து கொள்வோம். தர்மபுரி மாவட்டத்தில் வாங்கிய எருதுகளை மைதானத்தில் விட்டு எருதாட்ட விழாவை கோலாகலமாக நடத்துவோம்`` என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்