SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருவிழா கொடியேற்றம் : ஜூலை 28ல் அம்பாள் திருக்கல்யாணம்

2017-07-17@ 17:31:03

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 28ம் தேதி சுவாமிஅம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண உற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறககப்பட்டு, 5 மணிக்கு ஸ்படிலிங்க பூஜை நடந்தது. காலை 9.30 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் சர்வ அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து நவசக்தி மண்டபத்தில் அமைந்துள்ள அம்பாள் தங்க கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து காலை 10.30 மணிக்கு கோயில் குருக்களால் கொடியேற்றப்பட்டது. பின் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

கோயில் இணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கமிஷனர் பாலகிருஷ்ணன், மேனேஜர் முருகேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு 8 மணிக்கு கோயில் குடவர வாயிலில் பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி, ரத வீதிகளில் உலா வருகிறார். விழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கு மேல் அம்பாள் தங்கப்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 23ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவமும், 25ல் அம்பாள் தேரோட்டம், 27ல் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் மற்றும் பூப்பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. 28ம் தேதி இரவு 8 மணிக்கு தெற்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிஅம்பாள் திருக்கல்யாண உற்சவமும், ஆக.2ல் கந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்