SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

2017-07-17@ 15:27:15

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர பிரம்மோற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவம் இன்று அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேளதாளம் முழங்க அலங்கார ரூபத்தில் அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரம் அருகே விநாயகர், பராசக்தி அம்மன் எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் படிக்க, காலை 6.45 மணிக்கு அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது.

அப்போது அம்மன் சன்னதி முன்பு திரண்டிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தியுடன் தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 10 நாட்களும் காலையிலும், இரவிலும் மேளதாளம் முழங்க விநாயகர், பராசக்தி அம்மன் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். நிறைவு நாளான வருகிற 26ம்தேதி  காலையில் சிவகங்கை தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரியும், மாலையில் பெரியநந்தி அருகே உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்திஅம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். அதைத்தொடர்ந்து நள்ளிரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்