SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துடியலூர் அருகே தர்மராசர் கோவில் கும்பாபிஷேக விழா

2017-07-17@ 11:55:34

பெ.நா.பாளையம்: கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் பழமையான தர்மராசர் கோவில் உள்ளது. 12 வருடங்களுக்கு முன்பு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், மராமத்து வேலைகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 15ம் தேதி 2ம் கட்ட, 3ம் கட்ட கால யாக பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. கெளமார மடாலயம் சிரவை ஆதின முனைவர் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீன இளையபட்டம் முனைவர் மருதாசலம் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கினர். அதனை தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.

கோவில் கோபுரத்திற்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. ஊத்துக்குளி சிவ ஆகம சிரோன் மணி. சரவண மாணிக்க சிவாச்சாரியார், பன்னிமடை தண்டபாணி சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தனர். அதனை தொடர்ந்து தர்மராசருக்கு மஹாபிஷேகமும், அலங்கார பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தர்மராசரின் ஆசி பெற்று சென்றனர். இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-07-2017

    27-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • INDONEAIabatACCI

    இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

  • SKYtainCHIANNN

    சீனாவில் அதிவேக தொங்கும் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

  • 18yearVICTORYACELABE

    கார்கில் வெற்றியின் 18ஆவது ஆண்டு கொண்டாட்டம் : 1999 ஆம் ஆண்டு நடந்த போரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணப் படங்கள்

  • kargil_18victoryy

    கார்கில் போர் வெற்றி தினம் : போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்