SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்மதத்தினரும் பங்கேற்கும் சந்தியாகப்பர் விழா கொடியேற்றம்

2017-07-17@ 11:53:05

ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் சந்தியாகப்பர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ம் தேதி தேர்ப்பவனி நடைபெறுகிறது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காட்டில் மும்மதத்தினரும் பங்கேற்கும் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் சந்தியாகப்பர் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிரியார் ஆனந்த் தலைமையில் திருப்பலி பூஜை நடைபெற்றது.

பாதிரியார் ராஜஜெகன், தங்கச்சிமடம் ஜமாத் தலைவர் பசீர், முருகன் கோயில் நிர்வாகி கோவிந்தராஜ், திருவிழா குழுத்தலைவர் அந்தோணி சந்தியாகு மற்றும் தங்கச்சிமடம், அக்காள்மடம், அரியாங்குன்று, தண்ணீர் ஊற்று, ராமேஸ்வம், ஓலைக்குடா பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவின் 9 நாட்களும் மாலையில் நவநாள் திருப்பலி பூஜையும், பாதிரியார்களின் மறையுரை கருத்துக்களும் நடைபெறும். ஒன்பதாம் திருநாளான ஜூலை 24ம் தேதி மாலை பெருவிழா சிறப்பு திருப்பலி பூஜையும், சந்தியாகப்பர் தேர் பவனியும் நடைபெறும். ஜூலை 25ல் திருவிழா நிறைவுத்திருப்பலி பூஜையும், கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X