SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தட்சிணாயன புண்ணிய காலம்

2017-07-17@ 08:48:36

இந்த வருடம், ஜூலை மாதம் 17ம் நாள் ஆடி மாதப் பிறப்புக் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், 16ம் தேதி இரவு 10:13  மணிக்கு ஆடி மாதம் பிறந்துவிடுகிறது! ஆடி மாதம் பிறந்ததும் ‘தட்சிணாயனம்’ ஆரம்பமாகிறது. அதாவது, சூரியன் தன் பயணத் திசையை இம்மாதத்திலிருந்து மாற்றிக் கொள்கிறான். அதாவது, ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனம் (தெற்கு); தை முதல் ஆனி வரை உத்திராயனம்  (வடக்கு). தட்சிணாயனம் மழைக்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. அதாவது, வளத்தினை, தொடர்ந்து பண்டிகைகள், தெய்வீக வழிபாட்டு  நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆடி மாதம்தான் துவக்க மாதமாக அமைகிறது.

ஆடிச் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் இது. அவளின் அருட் சுழலுக்குள் சிக்குபவர்கள் மேன்மையுறுகிறார்கள். நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம். பெண்ணின் தாய்மையாகவும், வீறு கொண்டெழும் காளியாகவும், பாம்பின் புற்றினூடேவும், சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும், நட்டு வைத்த கல்லுக்குள்ளும் என்று அம்பாள் லட்சம் விதமாக தன்னை வெளிப்படுத்துறாள்.

‘‘நீ எனக்கு கோயில் கட்டும் முன்பே அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார்’’ என்று கருணை பொங்க கனவில் பேசியிருக்கிறாள். அண்டி வணங்கி அவளின் அருளில் நனைந்தோர் புற்றைச் சுற்றி சுவர் எழுப்பி கோபுரம் நிமிர்த்தி வணங்கினர். எந்த பிரச்னை ஆனாலும் அம்மா... தாயே... மகாசக்தி... தயாபூரணி... என்று கைகூப்பி கண்ணீர் மல்கி கருணையில் நனைந்தெழுந்தனர். பக்தர்கள் பால்குடம் சுமந்தும், மஞ்சள் பூசியும், குங்குமம் சாற்றியும், பொங்கல் வைத்தும், வேப்பிலை சேலை அணிந்தும் என பல விதங்களில் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆடியின் அடிப்படை தத்துவமே ‘உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்’ என்று கூறுகிறது. எனவே, இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் அருள் பெருக்கும் ஆலயங்களை தரிசிப்போம். குங்குமச் சந்தன மஞ்சளாக வாழ்வு கமழ்வதை அனுபவத்தில் உணர்வோம்.   

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்