வேம்புலி அம்மன் கோயில் ஆடிவெள்ளி திருவிழா

2017-07-15@ 11:41:10

ஆரணி: ஆரணி டவுன்கோட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள வேம்புலிஅம்மன் கோயிலில் ஆடிவெள்ளி திருவிழா வருகிற 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 20ம் தேதி மாலை 6 மணி அளவில் கோயில் வளாகத்தில் 508 திருவிளக்கு பூஜையும், மறுநாள் ஆடி முதல் வெள்ளிக்கிழமை காலை 5 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடக்கிறது. நகர எல்லையில் உள்ள கமண்டல நாகநதி கரையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் பூங்கிரகம், பம்பை உடுக்கை நாதஸ்வர மேளதாளத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 12 மணி அளவில் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 6 மணி அளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதிநவீன நூதன புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இதில் நாதஸ்வரம், தவில் இசை கச்சேரி, தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமியகலை நிகழ்ச்சிகளுடன் முக்கிய வீதி வழியாக அதிகாலை 5 மணிக்கு கோயிலை வந்தடைகிறது. மறுநாள் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் விழா குழு தலைவர் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் சின்னத்திரை சூப்பர் சிங்கர் நடுவர் சீனிவாசன் மற்றும் சின்னத்திரை சூப்பர் சிங்கர் புகழ் சோனியா குழுவினரின் பக்தி பாடல்களுடன் கூடிய மாபெரும் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
விழாவையொட்டி, நேற்று காலை ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தின் மேல்பகுதியில் ராட்சஷ பலூனை விழா குழு தலைவர் ஜி.வி.கஜேந்திரன் பறக்கவிட்டார். இதில் விழா குழுவைச் சேர்ந்த நெல் அரிசி வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் பீ.நடராஜன், சுப்பிரமணி, கொங்கராம்பட்டு ஆறுமுகம், மார்க்கெட் செல்வராஜ், இளையராஜா, இலியாஷ், டீக்கடை ராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், குணா, செந்தில், ஆவண எழுத்தர் சீனிவாசன், சேவூர் பீமன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
விராலிமலை கோயிலுக்கு 108 காவடி, பால்குட ஊர்வலம்
மன்னார்குடி காமாட்சி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா துவக்கம்
மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் சித்திரை தேர்திருவிழா துவங்கியது
ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா
வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தொடக்கம்
23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்