SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாக்கு மட்ரி

2017-07-15@ 09:19:58

என்னென்ன தேவை?

மைதா - 1½ கப்,
ரவை - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
ஓமம் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/4 கப்,
பொரிக்க எண்ணெய், உப்பு, சாட் மசாலா - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா, ரவை, சீரகம், கையில் கசக்கிய ஓமம், உப்பு சேர்த்து கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக 1/4 கப் எண்ணெயை சேர்த்து, பிரெட் தூள் மாதிரி வரும்வரை கலக்கவும். கையில் பிடித்தால் உதிரக்கூடாது. இந்த பதத்திற்கு வரும்போது கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியான பூரிமாவு பதத்திற்கு பிசைந்து, ஈரத்துணிக் கொண்டு மூடி 15 நிமிடத்திற்கு வைக்கவும்.

பிறகு மீண்டும் 5 நிமிடத்திற்கு கைவிடாமல் பிசைந்து கோலி அளவு உருண்டைகளாக உருட்டி, மத்தியில் கட்டைவிரல் கொண்டு அழுத்தவும். பார்ப்பதற்கு பாக்கு வடிவத்தில் இருக்கும். இந்த பாக்கு மட்ரிகளை எண்ணெயை காயவைத்து மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்தெடுத்து வடித்து, மேலே சாட் மசாலா தூவி பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்