SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேட்டை தங்கம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

2017-07-13@ 14:07:54

பேட்டை: பேட்டை பாண்டியாபுரத்திலுள்ள சந்தனமாரி என்ற தங்கம்மன் கோயிலில் கடந்தாண்டு பல லட்ச ரூபாய் செலவில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முதலாமாண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு டவுன் குறுக்குத்துறை தாமிரபரணி தீர்த்தக்கட்டத்திலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் அதிகாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா சூக்தம், கும்ப பூஜைகள் நடந்தன. பின்னர் விநாயகர், அம்பாள் விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 21 வகை திரவியங்களால் மூலாலய அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடந்தன.

மாலையில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், புஷ்பாஞ்சலியும் நடந்தது.தொடர்ந்து பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தங்கம்மன் சப்பர பவனி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை கோயில் அர்ச்சகர் மணி சர்மா, கணேச சர்மா செய்தனர். வேத விற்பன்னர்கள் ராமசாமி கார்த்திக் சர்மா, கவுதம் சர்மா, சீதாராமன் சர்மா உள்ளிட்டோர் பாராயணங்களைச் செய்தனர். ஏற்பாடுகளை விஸ்வகர்ம சமுதாய கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2018

    26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X