SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலாடி அக்னி வசந்தவிழாவில் அர்ஜூனன் தபசு மரம் ஏறுதல்

2017-07-13@ 14:07:17

கலசபாக்கம்: கலசபாக்கம் அடுத்த கடலாடியில் உள்ள திரவுபதியம்மன் கோயில் அக்னி வசந்தவிழாவில் நேற்று முன்தினம் அர்ஜூனன் தபசு மரம் ஏறுதல் நடந்தது. கலசபாக்கம் அடுத்த கடலாடியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அக்னி வசந்தவிழாவையொட்டி மகாபாரத சொற்பொழிவும், தெருக்கூத்து நாடகங்களும் நடைபெற்று வருகின்றன. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான அர்ஜூனன் தபசு மரம் ஏறுதல் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், கடலாடி, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மகாதேவ மங்கலம், சிங்காரவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்