SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கழுகாசலமூர்த்தி கோயிலில் வருஷாபிஷேக விழா

2017-07-13@ 14:06:44

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் 7வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கழுகாசலமூர்த்தி சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கும்பம் எழுந்தருளல் நடந்தது.

தொடர்ந்து கோயில் கோபுர விமான கலசத்திற்கு புனிதர்நீர் ஊற்றப்பட்டு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை மூர்த்தி பட்டர், சுப்பிரமணியன் பட்டர், ஐயப்பன் பட்டர் ஆகியோர் நடத்தினர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரன், முன்னாள் செயல் அலுவலர் தமிழானந்தன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2018

    26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X