SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டுப்பாளையத்தில் மழை வேண்டி வருண பூஜை

2017-07-13@ 14:05:22

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஸ்ரீபட்டத்தரசியம்மன் கோவிலில் மழை வேண்டி வருண பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் சாமி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 110ம் ஆண்டு திருவிழா நிகழ்ச்சி கடந்த மாதம் 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி நேற்று சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பவானி ஆற்றங்கரையில் இருந்து சுவாமி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் பக்தர்கள் கடவுள்களின் வேடம் அணிந்து கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-07-2017

    27-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • INDONEAIabatACCI

    இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

  • SKYtainCHIANNN

    சீனாவில் அதிவேக தொங்கும் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

  • 18yearVICTORYACELABE

    கார்கில் வெற்றியின் 18ஆவது ஆண்டு கொண்டாட்டம் : 1999 ஆம் ஆண்டு நடந்த போரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணப் படங்கள்

  • kargil_18victoryy

    கார்கில் போர் வெற்றி தினம் : போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்