SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புஞ்சை-புளியம்பட்டி அருகே மாதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

2017-07-10@ 15:36:38

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் பழமைவாய்ந்த மாதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்றுமுன்தினம் காலை பவானி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. நேற்று காலை விநாயகர் வழிபாடு மற்றும் யாகசாலை பூஜைகள் தொடங்கி காலை 9.15 மணிமுதல் 9.45 மணிக்குள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கருவறையில் உள்ள மாதேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதானை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்