SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்கால் அம்மையார் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுதுபடையல் நிகழ்ச்சி

2017-07-10@ 15:27:14

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு பிச்சாண்டவருக்கு, மாங்கனி, தயிர் சாதத்துடன் அமுது படையல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இறைவனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான மாங்கனித் திருவிழா கடந்த 6ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.

2ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் தேதி  புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, கயிலாசநாதர் கோயிலிருந்து, பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்று இரவு, திருவீதியுலா முடிந்து காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வரும் பிச்சாண்டவரை, அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று மாங்கனி, தயிர் சாதத்துடன் அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனியதிகாரி ஆசைதம்பி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்