SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குன்றத்தூர் மேதாலீஸ்வரர்

2017-07-07@ 09:06:28

கும்பாபிஷேகம் கண்ட தலங்கள்

சான்றோர் உடைய தொண்டை நாட்டின் கண் தருமமிகு சேக்கிழார் பெருமான் தோன்றி அருளிய நற்பதியே சென்னையில் அமைந்திருக்கும் குன்றத்தூர் ஆகும். இத்தலத்தில் அபயாம்பிகை சமேத ஸ்ரீமேதாலீஸ்வரர் பேரரருள் பெருக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களின் பேரன்பாலும், பக்திப் பெருக்காலும் 5:6:2017, திங்கட் கிழமையன்று மிகச் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமை ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடனும், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சின்ன பண்டார சந்நதி முன்னிலையிலும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆலயத்திற்கு நூதன இராஜகோபுரம், நூதன துவஜஸ்தம்பம், மஹாநந்தி, ஸ்ரீ சிவ சக்தி கணபதி முதலான பரிவார மூர்த்தங்களுடன் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்வில் ஆபத்து என்று இக்கோயிலின் வாயிலை அடைந்தவர்களை அபயாம்பிகை அஞ்சேல் என ஆறுதல் சொல்லி தேற்றுகிறாள். பேரறிவையும், தீர்க்கமான புத்தியையும் அளித்து ஸ்ரீமேதாலீஸ்வரர் ஆட்கொள்கிறார். சென்னை தாம்பரம், பல்லாவரம், பூவிருந்தவல்லியிலிருந்து எளிதாக குன்றத்தூர் தலத்தை அடையலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2018

    26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X