SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னியாகுமரியில் 15 டன் அரிசியில் அன்னபூஜை

2017-07-05@ 12:39:51

கன்னியாகுமரி: சுவாமி விவேகானந்தரின் 115வது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் அன்னபூஜை நடந்தது.
அன்னபூஜையையொட்டி கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள காஞ்சி அரங்கில் காலை 10 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேந்திரா தொண்டர்கள் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்கள் மூலம் பிடிஅரிசி திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட சுமார் 15 டன் அரிசியை மலைபோல் குவித்து வைத்தனர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதன்மேல் அன்னபூரணி விக்கிரகம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள், பாடல்கள் பாடப்பட்டன. மதியம் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கேந்திர தலைவர் பரமேஸ்வரன், துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொருளாளர் ஹனுமந்த்ராவ், செய்தி தொடர்பாளர்  ரகுநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்