SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியாத்தம்மன் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜை

2017-07-04@ 14:12:07

ஆரணி:  ஆரணி அரியாத்தம்மன் கோயிலில் நாளை(5ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நடந்த சிறப்பு யாகசாலை பூஜையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆரணி நகரின் காவல் தெய்வான அரியாத்தம்மன் கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அதன்படி, கோயில் கருவறை, விமானம், ராஜகோபுரம், மகா மண்டபம், மடப்பள்ளி, கன்னிமார் கோயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், அரசமர நாகசிலை மேடை புதுப்பித்தல், பரிவார தெய்வங்கள் சிலை அமைத்தல், புற்றுக்கோயில் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் இக்கோயிலில் நாளை(5ம் தேதி)காலை 11 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் கடந்த நேற்று முன்தினம்(ஞாயிறு) முதல் யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை நடந்த யாகசாலை வழிபாட்டில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டனர். பின்னர், இரவு 7 மணி அளவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்பி செஞ்சி சேவல் வி.ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு வழிபட்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்