SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரைவில் சகல பாக்கியங்களையும் பெறுவீர்கள்

2017-07-03@ 15:38:08

என் சகோதரி மகளின் வெளிநாட்டுப் பயணம் எப்பொழுது அமையும்? மேலும் முக்கிய கிரகங்களான சனி, சுக்கிரன், ராகு, செவ்வாய் அஷ்டமாதிபதி சாரம் பெற்று 12ல் இருக்கின்றன. இது நற்பலன்களைத் தராது என்கிறார்கள். உண்மையா? அவளுக்கு இரண்டாவது திருமணம் எப்போது அமையும்? - வினோத்குமார், சென்னை.

தங்கள் சகோதரி மகளின் ஜாதகப்படி சூரிய தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. அஷ்டமாதிபதி சூரியன் 12ல் இருப்பது விபரீத ராஜயோகத்தை அளிக்கிறது. இருந்தாலும் எட்டுக்குரிய கிரகம் 12ல் இருப்பது மன அமைதி இல்லாத நிலையையும், பலவிதங்களில் செல்வத்தை இழக்கும் சூழ்நிலையையும் கொடுக்கும். சனி, சுக்கிரன், ராகு மற்றும் செவ்வாய் லக்னத்தில் உள்ளனர்.

மகர லக்னம் சர ராசியாகும். அஷ்டமாதிபதியின் 12ம் இட சஞ்சாரத்தையும் மேற்கண்ட கிரகங்களின் சர ராசி சஞ்சாரத்தையும் கவனமாகவே பார்க்கிறோம். சனி, சுக்கிரன், ராகு, செவ்வாய் அஷ்டமாதிபதி சாரம் பெற்று 12ல் இருந்தால் பலன் அளிக்காது என்பது உண்மையா என்று கேட்டிருக்கிறீர்கள். என்னுடைய கணிப்பின்படி இது தவறான தகவல். அஷ்டமாதிபதி யோகத்தை கொடுக்கும் நிலையில் இருப்பதால் கெடுபலன் அதிகமில்லை. இவர் ஜாதகப்படி அடுத்தவர்களின் எண்ணங்களுக்கும் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். அதைத் தவிர்த்து தேவையற்ற நண்பர்களையும் தவிர்த்து தன் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருவது பெயருக்கு களங்கம் ஏற்படாமல் காக்கும்.

வருகின்ற 2018 பிப்ரவரிக்கு பிறகு முயற்சி செய்தால் நல்ல வரன் அமைவதற்குவாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு யோகமும் அந்த சமயத்திலேயே அமையும்.  பொறுமையும் நிதானமும் அவசியம். ஞாயிறுதோறும் துர்க்கைக்கு மாலை நேரத்தில் ராகுகால நேரத்தில் இரண்டு தீபங்கள் ஏற்றி வரச் சொல்லவும். மனக்கவலை தீர கீழேயுள்ள பாடலை தினமும் பக்தியோடு பாடி வாருங்கள்.
 
பொருந்திய முப்புரை செப்புரை
செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல்
மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய
அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் தலை
மேல் சென்னியதே.


எனது சகோதரனுக்கு 48 வயதாகிறது. திருமணம் ஆகவில்லை. நிரந்தர வேலை அல்லது சொந்த தொழில் செய்தால் வாழ்வில் முன்னேற வழியுண்டா? ஏதேனும் பரிகாரம் உண்டா? - சுந்தரேசன், திருவிடைமருதூர்.

தங்கள் சகோதரரின் ஜாதகத்தை தீவிரமாக ஆராய்ந்து பார்த்ததில் லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில், 5ம் இடமான மீனத்தில் ராகு, 6ல் சனி நீசம், 7ம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி. தாங்கள் அனுப்பிய ஜாதகத்தில் அஸ்வினி நட்சத்திரம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், பரணி நட்சத்திரம் 1ம் பாதம் வருகிறது. அதேபோல தசா இருப்பும் தாங்கள் அனுப்பிய ஜாதகப்படி கேது தசை இருப்பு 5 மாதம் 22 நாள். ஆனால், நாங்கள் கணித்தபடி சுக்கிர தசை இருப்பு 17 வருடம், 11 மாதம், 4 நாட்கள்.

தற்சமயம் ராகு தசையில் சனி புக்தி நடைபெற்று வருகிறது. 2018 மே மாதத்திற்குப் பிறகு மாற்றம் தெரியும். சிறிய அளவிலான தொழிலை அதிக மூலதனமில்லாமல் செய்து வருவது நல்லது. திருமணம் 2019 மே மாதத்திற்குள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதிக எதிர்பார்ப்பில்லாமல், வரும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது நல்லது. கீழேயுள்ள கோளறு பதிகத்தின் பாடலை தினமும் காலை, மாலை இருவேளையும் சொல்லி வரவும். நவகிரகங்களை தினமும் 9 முறை பிரதட்சணம் செய்து வரவும்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும்
உடனேஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!


எனக்கு நிரந்தரமான வேலை கிடைக்குமா? ECE நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அரசு வேலையா? தனியார் வேலையா? - சிவவேலவன், புளியங்குடி.

தங்களின் ஜாதகப்படி, லக்னாதிபதி புதன் 10ல் நீசமானாலும் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமாகி இருக்கிறார். ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான சனி சொந்த வீட்டில், 10க்கு அதிபதி சொந்த வீட்டில் உள்ளனர். தங்களின் கிரக நிலைகளும் சாதகமாகவே இருக்கிறது. வருகின்ற அக்டோபர் 15ம் தேதிக்குள் வேலை கிடைத்து விடும். தங்களுடைய 26 வயதிற்குள் அரசு வேலை கிடைப்பதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

குலதெய்வ வழிபாட்டை விடாமல் செய்து வரவும். புதன்கிழமைதோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலிலுள்ள ஸ்ரீசுதர்சனர்-நரசிம்மர் ஒருங்கிணைந்த விக்ரகத்தையோ அல்லது தனியே இருப்பார்களானால் அவ்வாறோ வணங்கி வாருங்கள். கீழேயுள்ள ஸ்ரீவிஜயலட்சுமி ஸ்தோத்திரத்தை தினமும் 12 முறை பாராயணம் செய்து வர, விரைவில் சகல பாக்யங்களும் பெறுவீர்கள்.

அஷ்ட பாஹீயுதாம்தே வீம் ஸிம்ஹாசன வரஸ்த்திதாம்
சுகாஸநாம் சுகேசீம்ச கிரீட மகுடோஜ்வலாம்
ச்யாமாங்கீம் கோமளாகாரம் சர்வாபரண பூஷிதாம்
கட்கம் பாசம் ததா சக்ரம் அபயம் சவ்ய ஹஸ்தகே
கேடகஞ் சாங்குசம் சங்கம் வரதம் வாமஹஸ்தகே
ராஜரூபதராம் சக்திம் ப்ரபா செளந்தர்ய சோபிதாம்
ஹம்சாரூடாம் ஸ்மரேத் தேவீம் விஜயாம் விஜயாப்தயே

எனக்கு 30.5.2018 முதல் குரு தசை ஆரம்பிக்கிறது. ராகு தசையில் குறிப்பாக 2007 முதல் இன்று வரை சோகமே வாழ்க்கை என்றாகி விட்டது. கவலை, துக்கம், தனிமை என்று நிறைய பிரச்னைகளை சந்தித்தாகிவிட்டது. மேலும், தற்பொழுது பயமும் சேர்ந்து விட்டது. இழந்ததை மீண்டும் பெற முடியுமா? குரு மஹா தசை நிம்மதியை தருமா? - பாரிவேல் சரவணன், கோவை.


தசாபுக்தி தங்களுக்கு சாதகமாகவே உள்ளது. ராகு தசையில் செவ்வாய் புக்தி கடந்த மே மாதம் 9, 2017 முதல் ஆரம்பித்திருக்கிறது. நன்மையான காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். கவலைப்பட வேண்டாம். தங்களின் ஜாதகப்படி சதா சஞ்சார யோகம் உள்ளதால் அலைச்சல் கண்டிப்பாக இருக்கும். ஆனால், அந்த கஷ்டகாலம் கடந்து விட்டது. இனி வரும் காலம் நல்லபடியாகவே அமையும். தினசரி குலதெய்வத்திற்கு தனி தீபம் ஏற்றி வரவும். கீழேயுள்ள ஸ்ரீசரஸ்வதி ஸ்தோத்திரத்தை தினசரி காலை குளித்து விட்டு தீபமேற்றி 12 முறை சொல்லி வரவும். நல்ல பலன் கிடைக்கும்.

யா குந்தேந்து துஷார ஹாரதவளா யா சுப்ர வஸ்த்ராவ்ரதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யா ஸ்வேத பத்மாஸநா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரதிபிஹி: தேவைஸ்ஸதா பூஜிதா
ஸா மாம்பாது ஸரஸ்வதீ பகவதீ நிஸ்யேஷ்ட ஷஜாட்யாபஹா

எனது பேரனுக்கு தகுந்த வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? - சிவகுருநாதன்.

தங்கள் பேரனின் ஜாதகப்படி வருகின்ற நவம்பர் 23ம் தேதிக்குப் பிறகு நல்ல வேலை அமையும். லக்னாதிபதி குரு 9ல் இருந்தாலும் அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் பகையாக இருப்பதாலும், செவ்வாய் 6ல் மறைவதாலும் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் தாமதமாகக் கிடைக்கும். ஐந்தாம் அதிபதி 6ல் மறைவது குலதெய்வ வழிபாட்டில் தடைகள் இருப்பதையும், சரியான வழிபாடு இல்லாத நிலையையும் காட்டுகிறது. குலதெய்வப் பிரார்த்தனை ஏதேனும் இருந்தால் உடனே நிறைவேற்றுங்கள். 28 வயதிற்கு மேல் திருமண யோகம் உண்டு. கீழேயுள்ள அன்னை வாராஹியின் துதியை தினமும் மனதாரச் சொல்லிவர சகல தடைகளும் விலகி மிகச்சிறந்த வாழ்வு அமையும்.

ஓம் குண்டலினி புரவாசினி சண்டமுண்ட விநாசினி
பண்டிதஸ்யமனோன்மணி வராஹீ
நமோஸ்துதே!
அஷ்டலஷ்மி ஸ்வரூபிணி அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி வராஹீ நமோஸ்துதே!


என் மகனுக்கு எவ்வளவு முயற்சி செய்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே செல்கிறது.  எப்பொழுது திருமணம் நடக்கும்? மண வாழ்க்கை எப்படி அமையும்? - ஒரு வாசகி, திருச்சி.

தங்கள் மகனின் ஜாதகப்படி லக்னாதிபதியாக சூரியன் வருகிறார். லக்னத்தில் செவ்வாய். குரு 3ல் பகை, ராகு 12ல் பகை, 7க்குடைய சனி 2ல் குடும்ப ஸ்தானத்தில் இருக்கிறார். திருமண யோகம் உண்டு. அம்சத்தில் 7ல் குரு, சுக்கிரன், செவ்வாய் போன்றோரின் சேர்க்கை மற்றும் நடக்கும் தசாபுக்திகள் திருமணத் தடையை காட்டுகின்றன. இவருடைய 28ம் வயதிற்குள் திருமணம் நடந்திருக்க வேண்டும்.

அது தவறும்பொழுது 36 வயது முழுமையாக முடிந்த பிறகே திருமணத்திற்கான வாய்ப்பு அமையும். சொந்தத்திலோ அல்லது காதல் திருமணமாகவோ நடைபெறலாம். திருவானைக்காவில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோயிலுக்குச் சென்று ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சந்நதியில் தீபமேற்றி வர, தடைகள் உடனடியாக விலகும். வீட்டிலிருந்து எண்ணெயை எடுத்துச் செல்ல வேண்டும். கீழேயுள்ள ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரத்தை தினசரி காலையில், குளித்து விட்டு தீபமேற்றி 12 முறை சொல்லி வரவும்.

ஸ்ரீக்ரிஷ்ண வதநா
கராரவிந்தேந பதாரவித முகாரவிதே விநிவேஷயத
வடஸ்ய பத்ரஸ்ய புடே ஷயாந பால முகுந்த மநஸா ஸ்மராமி
வஸுதேவஸுதம் கம்ஸசானூர மர்தநம்
தேவகீபரமாநந்த க்ரிஷ்ணம் வந்தே ஜகத்குரும்

எனது மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவன் என்ன படிக்கலாம் என்பதைக் கூறுங்கள்? - விஜயகுமார், சேலம்.


தங்கள் மகனின் ஜாதகப்படி லக்னாதிபதி குரு 9ம் இடத்தில் புதன் சொந்த வீட்டில் வலுவான நிலையில் இருப்பதால் கணிதம், ஆடிட்டர், கம்பெனி செகரட்டரிஷிப் போன்ற துறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சூரியனின் சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் அதிகாரமிக்க பதவியில் அமர்வதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. கீழேயுள்ள ஸ்ரீகெளரி ஜபத்தை தினசரி காலை குளித்து விட்டு தீபமேற்றி 27 முறை சொல்லி வரவும். மிகச் சிறந்த, உயர்ந்த பதவியை அடையலாம்.

ஓ நம: ஷிவகாதாயை ஹ்ரீ நம: ஷிவஷக்த்யை.
ஓ நமோ ஜகதா வதே மமபூயாந்மநோரத:


எனது மகன் இந்த வருடம் இன்ஜினியரிங் முடிக்கிறான். எம்.எஸ். செய்யவேண்டுமென்று ஆசைப்படுகிறான். மேற்கொண்டு படிக்க வைக்கலாமா? அல்லது வேலைக்கு முயற்சி செய்யலாமா? கேம்பஸ் இன்டர்வியூவிலும் வேலை கிடைத்துள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை. தயவு செய்து வழிகாட்டுங்கள்.- ஒரு வாசகி, புதுக்கோட்டை


தங்களின் மகனின் ஜாதகம் மிகவும் அருமையான ஜாதகம். தொட்டது துலங்கும். தற்சமயம் கிரக நிலையின்படி கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்வது நல்லது. 2019 மே 18ம் தேதிக்குப் பிறகு லக்னாதிபதியின் முழு பலனும், குரு மற்றும் புதனின் சாதகமான பார்வையும் கிடைப்பதால் வெளிநாட்டிற்குச் சென்று மேற்படிப்பு படிக்கும் யோகம் தானாகவே அமையும்.

மனோகாரகனான சந்திரனின் பகை மற்றும் கிரகச்சேர்க்கை மனதில் சில சமயங்களில் குழப்பத்தை தரலாம். திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு செய்து வருவது மன நிம்மதியை தரும். கீழேயுள்ள சிவ ஸ்துதியை பாராயணம் செய்து வர மன அமைதி கிடைப்பதுடன் அற்புதமான வாழ்வும் அமையும்.

வதே ஷபுமுமாபதி ஸுரகுரு வதே ஜகத்காரண
வதே பந்நகபூஷண ம்ரிகதர வதே பஷூநாபதி
வதே ஸூர்யஷஷாத வஹ்நிநயந வதே முகுதப்ரியா
வதே பக்தஜநாஷ்ரய த வரத வதே ஷிவ ஷகர


ஸ்ரீவாராஹி உபாசகர் ஜோதிடர் தி.ஸ்ரீனிவாசராமன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்? ஆன்மிகம், தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-04-2018

  26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • bangladesh_accd1

  1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

 • nationalpanchayat

  தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

 • turkey_building11

  துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

 • saamiyarrape129

  சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்