SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது

2017-06-19@ 14:13:09

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று  காலை 8  மணிக்கு தருமபுரி சோகத்தூர் கார்மல் தியான ஆசிரமம் ஸ்டீபன் தட்சில் நவநாள அருட்கொடை தியான திருப்பலியை நடத்தி வைத்தார். அதனைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்சிக்கு பங்குத்தந்தை ஜார்ஜ் ரோசாரியொ தலைமை தாங்கினார் ஸ்டீபன் தட்சில் ஆராதனை செய்து கொடியேற்றி வைத்தார்.

இதில், பங்கு மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து தினசரி மாலை  6  மணிக்கு திருப்பலி அருளுரை நவநாள் தேர்பவனி நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. வரும் 25 ந்தேதி காலை 8.30 மணிக்கு கோவை மறை மாவட்ட ஆயர் எல். தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி முதல் நற்கருணை அருட்சாதனம் வேண்டுதல், தேர் மாலை 5:30 மணிக்கு நவ நாள் திருப்பணி, மாலை 7 மணிக்கு அலங்கார தேர் பவனி, இரவு 8 மணிக்கு நற்கருணை ஆசீர், அடுத்த மாதம் 4ஆம் தேதி கோடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்