SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

2017-05-19@ 12:19:54

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வெங்கடாசலபுரம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில்பட்டி அருகே  வெங்கடாசலபுரம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா மே 25ம் தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் கொடியேற்று விழா நடந்தது. மாலை  6.30 மணிக்கு நடந்த கொடியேற்று விழாவில் பங்குதந்தையர்கள் பங்களாவில் இருந்து பவனியாக அழைத்து வரப்பட்டு, நெல்லை சரணாலயம் இயக்குநர்  ஜெயபாலன் கொடியேற்றி, சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர் உலக சமாதானம் வேண்டி புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

ஆலயத்தில் பங்குதந்தை ஜெயபாலன் தலைமையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆர்.சி.பள்ளிகளின் கண்காணிப்பாளர் வியாகப்பராஜன், பங்குதந்தைகள்  வினோத், அருள்பிரகாசம், சவரிமுத்து, வெங்கடாசலபுரம் ஆலய பங்குத்தந்தை வில்சன் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். இதில்  வெங்கடாசலபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். மே 24ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு  தேரடி திருப்பலியும், தேர்ப்பவனியும், கும்பிடு சேவையும், தொடர்ந்து இரவு 7 மணிக்கு புதுநன்மை விழாவும் நடக்கிறது. 25ம் தேதி இரவு 7 மணிக்கு நற்கருணை  பவனியும், அசனவிருந்தும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை வில்சன் செய்திருந்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2017

    25-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • californiaHIGHsurINHIGHWAY

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முற்றாக சேதம்

  • seADEGRESEDbusywork

    புதுவையில் துறைமுகம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், கடலுக்குள் தூர்வாரும் பணி மும்முரம்

  • 500METREGLASSslideINchina

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சீனாவில் மஞ்சள் ஆறு மீது 500 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி சறுக்கு அமைப்பு

  • police_vehicless1

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன