SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலம்புரி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

2017-05-19@ 12:18:52

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் டபுள்ரோடு வலம்புரி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் 29ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக  நிகழ்ச்சிகள் வரும் 27ம் தேதி காலை 8 மணியளவில் அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து கோ பூஜை, தனபூஜை, கணபதி  ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. அன்று மாலை 6 மணியளவில் வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம்,  கும்பாலங்காரம், முதல் கால பூஜை ஆகியன நடக்கிறது. மறுநாள் 28ம் தேதி ஞாயிறு காலை 8 மணியளவில் விசேஷ சந்தி, 2ம் கால யாக பூஜை, அஷ்டபந்தன  சமர்ப்பணம், பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியன நடக்கிறது.

மாலை 6 மணியளவில் 3ம் கால யாக சாலை பூஜையும், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியன நடக்கிறது. 29ம் தேதி  திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் 4ம் கால யாக பூஜையும், யாத்ராதானம் மகா பூர்ணாஹூதியும் நடக்கிறது. காலை 6.15 மணியளவில் கடம்  புறப்பாடும், காலை 6.45 மணியளவில் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.

கும்பாபிஷேக விழாவுக்கு தெங்கால் ஞானகுருபரன் பிரசன்ன வெங்கடேச சுவாமிகள், தெங்கால் மவுனகுரு ஜீவசமாதி ஆசிரமம் நிர்வாகி ஏ.எஸ்.மகாலட்சுமி  ஆகியோர் முன்னிலையில் உதய பாஸ்கர சிவாச்சாரியார், ஜலகண்டேஸ்வரர் கோயில் கணேச சிவாச்சாரியார், பழனி ஆண்டவர் கோயில் விஜயராகவ  பட்டாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை வலம்புரி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக கமிட்டி மற்றும் பகுதி மக்கள்  செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்