SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுராந்தகத்தில் பஞ்ச சம்ஸ்காரம்!

2017-05-19@ 10:09:48

காஞ்சிப் பேரருளாளன் திருக்கச்சி நம்பிகள் மூலமாகத் தனக்கு இட்ட கட்டளைப்படி ராமானுஜர் பெரிய நம்பியை சந்திக்கத் திருவரங்கம் நோக்கி புறப்பட்டார். இதனிடையில் பெரிய நம்பிகளும் ராமானுஜரை சந்திக்க காஞ்சிப் பயணம் மேற்கொண்டார். யதேச்சையாக இருவரும் மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமபிரான் சந்நதியில் சந்தித்தனர். பெரிய நம்பிகளிடம் ராமானுஜர் இங்கேயே தமக்கு பஞ்ச ஸம்ஸ்கார சடங்கினை நிறைவேற்றும்படி வேண்டிக்கொள்ள அதன்படி சந்நதியின் உள்ளே இருந்த ஒரு மண்டபத்தில் அச்சடங்கு நடந்தேறியது.

மதுராந்தகத்தில் தனிச் சந்நதியில் ராமானுஜர் காட்சியளிக்கும் சந்நதி அமைந்துள்ளது. பெரிய நம்பிகள் தன் ஆராதனைப் பெருமானான கண்ணனுடன் மற்றும் பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கு உபயோகித்த சூட்டுக் கோல்களுடன் காட்சியளிக்க, ராமானுஜரும் அவர் அருகில் வெள்ளை வஸ்திரத்துடன் (அப்போது அவர் கிரஹஸ்தாஸ்ரமத்தில் இருந்தபடியால்) காட்சியளிக்கிறார். இதை முன்னிட்டு ஆவணி மாதத்தில் ஒரு விழா நடத்தப்படுகிறது.ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது (சன்னியாசியான பிறகு) ராமானுஜர் சில வீடுகளில் பிட்ஷை எடுத்து அதில் கிடைக்கும் அரிசியைக் கொண்டு உணவு தயாரித்து சாப்பிடுவது வழக்கம்.

ராமானுஜர் பொதுவாக ஆண்டாளின் திருப்பாவையையே எப்போதும் மனதில் நினைத்துக் கொண்டே இருப்பார். ஒருசமயம் அவர் பெரிய நம்பிகளின் திருமாளிகைக்கு பிட்ஷை பெற சென்றபோது 18ம் பாசுரமான ‘‘உந்து மத களித்தன்’’ பாசுரத்தை மனதில் பாடியவாறே சென்றார். அவ்வமயம் பெரிய நம்பிகளின் குமாரத்தி அத்துழாய் என்பாள் கதவை திறந்து பிட்ஷை இட வந்தபோது ராமானுஜர் தரையில் விழுந்து அவளை வணங்கிவிட்டார்.

இதனைக் கண்டு பதறிப்போன அத்துழாய் தனது தந்தையிடம் சென்று விவரத்தைக் கூற, ‘‘ராமானுஜர் ‘உந்து மத களித்தன்’ ஆண்டாளின் பாடலில் நெஞ்சுருகி உன்னை திருமகளாக நினைத்தே அவ்வாறு செய்தார்,’ என்று கூறி அவளுடைய அச்சம் மிகுந்த ஐயத்தைப் போக்கினார். அதோடு, ராமானுஜருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்று திருநாமம் இட்டு பெருமை செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2017

  14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 80thNanjingMassacre

  நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

 • parliament_attacs

  நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

 • therthal_ujarath11

  குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

 • DougJonesvictory

  அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்