SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வைகாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

2017-05-15@ 10:27:13

வைகாசி 1, மே 15, திங்கள்

சதுர்த்தி. காரைக்குடி கொப்புடையம்மன் குதிரைவாகனத்தில் பவனி. சமயபுரம் பஞ்சபிராகார உற்சவம். குடியாத்தம் கங்கையம்மன் சிரசு உற்சவம்.

வைகாசி 2, மே 16, செவ்வாய்
 
பஞ்சமி. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.  தருமை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஆதிகுருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை. இரவு தருமை ஆதினம் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் காவிரியில் நீராடி குருமூர்த்த வழிபாடு. பாம்பன் ஸ்வாமிகள் குருபூஜை.

வைகாசி 3, மே 17, புதன்  

சஷ்டி. திருவோணவிரதம். சாத்தூர் வேங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி. 26வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் பட்டினப்பிரவேசம். ஸ்ரீசத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம். சின்னாலம்பாடி கிராமம். உத்திரமேரூர் தாலுகா. (காலை 9.45  11.15).

வைகாசி 4, மே 18, வியாழன்  

சப்தமி. அஷ்டமி. அகோபிலமடம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருத்தேர்.

வைகாசி 5, மே 19, வெள்ளி  

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

வைகாசி 6, மே 20, சனி  

கரிநாள். நவமி. குச்சனூர் சனிபகவான் சிறப்பு ஆராதனை. திருக்குவளை பிரம்மோற்சவம் ஆரம்பம்.

வைகாசி 7, மே 21, ஞாயிறு  

தசமி. திருக்குவளை பிரம்மோற்சவம் ஆரம்பம்.

வைகாசி 8, மே 22, திங்கள்

ஸர்வ ஏகாதசி. காரைக்குடி பள்ளத்தூர் பெரியநாயகியம்மன் திருத்தேர்.

வைகாசி 9, மே, 23, செவ்வாய்


பிரதோஷம். காரைக்குடி பள்ளத்தூர் ஸ்ரீபெரிய நாயகியம்மன் திருத்தேர்.

வைகாசி 10, மே 24, புதன்  

திரயோதசி. கழற்சிங்கர். மாத சிவராத்திரி.

வைகாசி 11, மே 25, வியாழன்  

அமாவாசை. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. கார்த்திகை விரதம். வேளூர் கிருத்திகை. திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் பிடாரி உற்சவம். காப்பு கட்டுதல். திருவள்ளூர் வீரராகவர் கோடை உற்சவம்.

வைகாசி 12, மே 26, வெள்ளி  

பிரதமை. சிவகாசி விஸ்வநாதர் உற்சவாரம்பம். பூச்சப்பரத்தில் பவனி. புன்னாக கெளரி விரதம். சீர்காழி முத்துச்சட்டைநாதர் உற்சவம்.

வைகாசி 13, மே, 27, சனி  

திவிதியை. குச்சனூர் சனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை.

வைகாசி 14, மே 28, ஞாயிறு  

ரம்பா திரிதியை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாளமாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி. ஸ்ரீமத் ஆண்டவன் ரங்கராமானுஜ தேசிகன் திருநட்சத்திரம்.

வைகாசி 15, மே 29, திங்கள்  

சதுர்த்தி. சதுர்த்தி விரதம். சிவகாசி விஸ்வநாதர் பூச்சப்பரத்தில் பவனி. இரவு ரிஷப வாகனத்தில் புறப்பாடு. கதலீ கெளரீவிரதம். திருநரையூர் ஸ்ரீநம்பியாண்டார் குருபூஜை. தஞ்சாவூர், செந்தலை, கண்டியூர், திருவிடைமருதூர் முதலிய சிவதலங்களில் வைகாசி விசாக உற்சவாரம்பம். சென்னை சைதை காரணீஸ்வரர் கோயில் வசந்தோற்சவம் ஆரம்பம். பகவான் ஸ்ரீசங்கர நாராயண பரப்ரம்ம ஜெயந்தி.

வைகாசி 16, மே 30, செவ்வாய்  

கரிநாள். பஞ்சமி. நமிநந்தியடிகள், சேக்கிழார் திருநாள். உத்தமர்கோயில் சிவபெருமான் சூரியபிரபையில் பவனி. நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி உற்சவாரம்பம். சிதம்பரம் 63வர் திருவிழா.

வைகாசி 17, மே 31, புதன்  

சஷ்டி. கரிநாள். சோமாசிமாறனார். சஷ்டிவிரதம். மதுரை ஸ்ரீகூடலழகர் உற்சவாரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதியுலா. ஆரண்ய கெளரி விரதம்.
திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் தேவேந்திரமயில் உற்சவம்.

வைகாசி 18, ஜூன் 1, வியாழன்  

சப்தமி. ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்க திருப்புளி வாகனத்தில் பவனி. ஸ்ரீரங்கம், திருவள்ளூர் தலங்களில் வசந்தோற்சவம் ஆரம்பம்.

வைகாசி 19, ஜூன் 2, வெள்ளி

அஷ்டமி. பழநி ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் திருவீதியுலா. திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கல்யாணம்.

வைகாசி 20, ஜூன் 3, சனி  

நவமி. காளையார்கோயில் சிவபெருமான் சமணர்களை கழுவேற்றும் லீலை. இரவு வெள்ளி ரிஷப வாகனம்.

வைகாசி 21, ஜூன் 4, ஞாயிறு  

பாபஹர தசமி. இன்று காலை மணி 9.58க்கு மேல் 10.34 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று. திருவிடைமருதூர் திருக்கல்யாணம்.  திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் அதிகாரநந்தி சேவை. இரவு தெருவடைச்சான்.

வைகாசி 22, ஜூன் 5, திங்கள்  

ஏகாதசி. மதுரை கூடலழகர் யானை வாகனத்தில் புறப்பாடு. திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் வெள்ளிரதம். மைசூர் அவதூத தத்தபீடம் ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமி ஜெயந்தி.

வைகாசி 23, ஜூன் 6, செவ்வாய்  

நட்சத்திர துவாதசி. பிரதோஷம். சோழவந்தான் ஜனகமாரியம்மன்  பாற்குடக்காட்சி. இரவு புஷ்பப்பல்லக்கில் பவனி.  திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கல்யாணம். வெள்ளி ரிஷபங்களில் பரிவேட்டை.               

வைகாசி 24, ஜூன் 7, புதன்  

திரயோதசி. நம்மாழ்வார். வைகாசி விசாகம். பழமுதிர்சோலை வெற்றிவேல் முருகனுக்கு பாலபிஷேகம். சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் லட்சார்ச்சனை. நன்னிலம் ஸ்ரீநாராயண தாண்டவேஸ்வர ஸ்வாமிகள் குருபூஜை.

வைகாசி 25, ஜூன் 8, வியாழன்  


சதுர்த்தசி. காஞ்சி வரதராஜர் கருடசேவை. காஞ்சி மகா பெரியவா ஜெயந்தி. சீர்காழி திருஞானசம்பந்தருக்கு ரக்ஷாபந்தனம். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் வள்ளி கல்யாணம். திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் தேர். பாலமடை ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர் ஜெயந்தி. முடி கொண்டானின் ஸ்ரீஆலங்குடி பெரியவா ஆராதனை.

வைகாசி 26, ஜூன் 9, வெள்ளி  

ஆ.கா.மா.வை. சோழவந்தான் ஜனகமாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. மயிலை கபாலி லக்ஷதீபம். கும்பகோணம் சார்ங்கபாணி வெள்ளிரதம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சர்வதீர்த்தத்தில் தெப்போற்சவம். திருவஹீந்திரபுரம் வசந்தோற்சவம். திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் இரவு புஷப்பல்லக்கு.
 
வைகாசி 27, ஜூன் 10, சனி  

பிரதமை. திருஞானசம்பந்தர், முருகனார், திருநீலகண்டபாணர், திருநீலநக்கர் திருநாள். அரியக்குடி ஸ்ரீனிவாசப்பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள் தலங்களில் தெப்போற்சவம். திருஞானசம்பந்தர் இரவு திருக்கல்யாணம். தஞ்சை முத்துப் பல்லக்கு. ஸ்ரீஸ்கந்தாஸ்ரமம் சாந்தானந்த ஸ்வாமிகள் ஆராதனை.

வைகாசி 28, ஜூன் 11, ஞாயிறு  

துவிதியை. திருக்கண்ணபுரம் செளரிராஜப்பெருமாள் விடையாற்று திருமஞ்சன சேவை.

வைகாசி 29, ஜூன் 12. திங்கள்  

திரிதியை. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் ரதோற்சவம். திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் மாஹேஸ்வர பூஜை. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருத்தேர். கும்பகோணம் சக்ரபாணிஸ்வாமி தெப்பம்.

வைகாசி 30, ஜூன் 13, செவ்வாய்  

சங்கடஹர சதுர்த்தி. திருவோணவிரதம். பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் புறப்பாடு. சிறப்பு அபிஷேகம்.

வைகாசி 31, ஜூன் 14, புதன்  


பஞ்சமி. கீழ்த்திருப்பதி கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. நான்கு மாட வீதி புறப்பாடு. திருவோணவிரதம். மன்னார்குடி பெரியவா ஜெயந்தி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-06-2018

  20-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

 • sushmafrancepm

  பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

 • coolingtowersflorida

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

 • taiwaneseminimodels

  தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

 • tentsforchildrenstexas

  அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்