SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

2017-04-25@ 09:36:39

நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி என்ற அழகான ஊர் உள்ளது. இங்கு மிகவும் பிரபலமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. மூலவராக பரகோடி கண்டன் சாஸ்தாவே உள்ளார். இந்த கோவிலின் தலபுராணத்தில் சாஸ்தா குறித்தும் மீனாட்சியம்மன் குறித்தும் உள்ளன. அதன்படி இந்த கோவிலின் மூல தெய்வமான சாஸ்தா சுயம்புவாக உருவானவர் என்பது ஐதீகம். முன்னொரு காலத்தில் இந்த ஊரில் தொண்டைமான் பரவர்கள் என்னும் சமூகத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர். ஒருமுறை இந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது முயல் ஒன்று செடிக்குள் ஓடி ஒளிந்து இருக்கிறது. இதை அவர்கள் பார்த்து விட்டனர்.

உடனே வேட்டையில் ஈடுபட்டவர்கள் முயலின் மேல் வேலால் ஓங்கி குத்தினர். உடனே ரத்தம் வந்தது. தொடர்ந்து செடிகளை விலக்கியவர்கள் முயலை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே ஒரு மூர்த்தியின் அடையாளத்தை கண்டனர். சாஸ்தாவை முதலில் பரவர்கள் கண்டதால் இவர் பரகோடி கண்டன் சாஸ்தா என பெயர் பெற்று அனைவராலும் அழைக்கப்பட்டார். பரவர்கள் வேலை குத்திய இடத்தில் முனிவரின் சமாதி இருந்தது. அந்த இடமே சாஸ்தாவின் கோயிலானது என்றும் கூறப்படுகிறது. அவ்வையார் சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்குள் சமரசம் செய்து வைக்க இந்த பகுதியில் கூடியபோது, பாண்டிய மன்னன் தன் குலதெய்வமான மீனாட்சியை கொண்டு வந்து ஏற்கனவே சாஸ்தா இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல மதுரையில் அன்னியர் படை எடுத்து வந்தனர். அப்போது அங்குள்ள மீனாட்சியின் தங்க படிமத்தை ஆரல்வாய்மொழி கிலுகிலுப்பை காட்டில் மறைத்து வைத்ததாக தெரிகிறது. இந்த பகை நீங்கிய பிறகு அதனை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு மீனாட்சியின் படிமம் வைக்கப்பட்ட இடமே பின்னர் கோயிலாக உருப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

பூஜை விபரம்


கோயிலில் காலை 5 மணி நடை திறப்பு, 6.30 உஷ பூஜை, 9.05 காலசுத்தி பூஜை, 10.30 உச்சகால பூஜை. 11 நடை சாத்துதல். மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 சாயரட்சை தீபாராதனை, 7.45 மணிக்கு அர்த்தசாம பூஜை, 8 அத்தாழ பூஜை, 8.30 கோயில் நடை சாத்துதல்.  இந்த கோவிலில் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவும், சித்திரை மாதம் 4 நாட்கள் திருக்கல்யாண விழாவும், தம்புரான் கொடை விழா என மூன்று முக்கிய விழாக்கள் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china_cloning11

  செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

 • snow_river_falls11

  மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

 • christmas_planeealm1

  உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

 • sutrula_12Icehotel1

  சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

 • mumbai_theevibathu11

  மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்