SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

2017-04-21@ 14:54:46

கும்பகோணம்: அம்மாசத்திரம் சதுர்காலபைரவர் கோயிலில் சதுர்காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கும்பகோணம் அடுத்த அம்மாச்சத்திரத்தில்  ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. சிறப்பு பெற்ற இக்கோயிலை பக்தர்கள் காலபைரவர் கோயில் என அழைக்கின்றனர். காசிக்கு நிகராக காலபைரவர் தலமாக போற்றப்படும் இக்கோயிலில் உள்ள பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், கிரது, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகிய 7 பேரும் பூஜைகள் செய்து வழிபட்டதால் இத்தலத்தின் சுவாமிக்கு சப்தரிஷீஸ்வரர் என்று பெயர்  பெற்றதாக வரலாறு.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பாளின் பெயர் ஞானம்பிகை. மேலும் பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கவுமாரி, இந்திராணி ஆகிய தெய்வங்களும்  இத்தலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் காலபைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது. சிறப்பு வாய்ந்த கோயிலில் காலபைரவருக்கு நேற்று முன்தினம் இரவு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சிறப்பு பைரவ ஹோமம், மாலை 6.30மணிக்கு 23 வகையான திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகமும், இரவு 8மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை  தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும், காலபைரவர் வழிபாட்டு குழுவினரும் செய்திருந்தனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்