SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதம்பரம் தில்லைகாளி கோயிலில் மழை வேண்டி அஷ்டமி பூஜை

2017-04-21@ 14:51:08

சிதம்பரம்: சிதம்பரம் எல்லையில் புகழ்பெற்ற தில்லைகாளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு அஷ்டமி பூஜை நடந்தது. கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி தினங்களில் ராகுகாலத்தில் தீபம் ஏற்றி தில்லைகாளியை வழிபட்டால் பூர்வ ஜென்ம சாப தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும். தில்லை காளி வழிபாட்டு மன்றம் சார்பில் தேய்பிறை அஷ்டமி திதியில் காளிகாஷ்டமி பூஜை என பெயரிட்டு அஷ்டமி பூஜை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் கோயிலில் காளி சன்னதி எதிர்புறத்தில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் அஷ்டமி பூஜை நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அஷ்டமி பூஜை செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தில்லைகாளி வழிபாட்டு மன்ற அனந்தகிருஷ்ணன், பாண்டியன், சந்திரசேகர், சூரியநாராயணன், சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்