SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்

2017-04-21@ 14:50:33

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு நேற்று மகாருத்ர மகாபிஷேகம் நடந்தது. சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகாபிஷேகம் நடப்பது வழக்கம். மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் மகாபிஷேகம் நடக்கும். இதில் ஆனி, மார்கழி மாத அபிஷேகங்கள் விடியற்காலையில் ராஜசபை என்கின்ற கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடக்கும். மற்ற நான்கு மாத அபிஷேகங்களும் மாலை 6 மணிக்கு மேல் கோயில் கனகசபையில் நடக்கும். சித்திரை மாதத்தில் நடக்கும் மகாபிஷேகம் நேற்று இரவு கோயில் கனகசபையில் நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சன்னதி திறக்கப்பட்டு காலை 9 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நடந்தன. காலை 9.30 மணிக்கு மேல் மூலவரான சிவகாமசுந்தரி நடராஜ பெருமான் கோயில் சித்சபையில் இருந்து கனகசபையில் எழுந்தருளினார்கள். பின்னர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் மகா ருத்ர ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்றிரவு சாமிக்கு மகாபிஷேகம் நடந்தது. பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் மகாபிஷேகம் நடந்தது. இதனை தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2018

    24-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Two_wheeler_launch

    ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானிய விலை இரு சக்கர வாகனங்கள்

  • amman_murugan123

    மாசிமாத பிரம்மோற்சவ விழா: முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் நடைபெற்ற வீதி உலா காட்சிகள்!

  • hyper_dubai123

    12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்

  • jakto_jiyo11

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X