SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரக்காணத்தில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்பு கூட்டு பிரார்த்தனை

2017-04-21@ 14:49:56

மரக்காணம்: மரக்காணம் பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் கடந்த 3 மாதத்திற்கு முன்பே வறண்டு போனது. இதனால் இப்பகுதியில் வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வங்கக் கடலில் உண்டான மருதா புயலால் கடற்கரை ஓரம் உள்ள மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால் அனல் காற்றுடன் கூடிய கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இங்கு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் இது வரையில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  

இதுபோல் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக பல விவசாயிகள் தங்களிடம் இருக்கும் கால்நடைகளை வந்த விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இதே நிலை நீடித்தால் கால்நடைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் தண்ணீர் கிடைக்காமல் அழிந்து விடும் அபாய நிலை உள்ளது. இந்நிலையில் மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியை சேர்ந்த சுன்னத் ஜமாத் சார்பில் முஸ்லிம் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று கழுவெளி பகுதியில் சுட்டெரிக்கும் வெளிலில் திறந்த வெளியில் அமர்ந்து மழைவேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tulipTOEWFLOAWERS

  அமெரிக்காவில் ஸ்கஜித் பள்ளத்தாக்கில் 34-வது மலர் திருவிழா: பூத்துக் குலுங்கும் துலிப் மலர்கள்

 • INDAIANdogEXHIBIATION

  கென்னல் கிளப் சார்பில் நடைபெற்ற அகில இந்திய நாய் கண்காட்சி : பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்பு

 • fireFRIIN4hatrdAMBB

  அச்சகத்திற்கு மை தயாரிக்கும் கம்பெனியில் தீடீரென்று ஏற்பட்ட தீவிபத்து : 4மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

 • ooti_kodai_flow

  விடுமுறை தினத்தை முன்னிட்டு ஊட்டி & கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது

 • streets_madhava

  சித்திரை திருவோணப் பெருவிழா : சேஷ வாகனத்தில் மாதவப்பெருமாள் வீதி உலா